generic · 12th TN - English Medium · TAMIL · Page 69question

உரிமைத் தாகம்

Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about உரிமைத் தாகம்?

உரிமைத் தாகம் – பூமணி அந்தச் சங்கதி இதுவரைக்கும் முத்தையனுக்குத் தெரியாது. அவன் பெண்டாட்டி சொல்லித்தான் தெரியும். “மேலக்காட்ல கீழத்தாருமேல நம்பிக்க்கெரையம் எழுதியிருக்குதாமில்ல ஒங்க தம்பி.” முற்றத்தில் எருமைச்சாணியுடன் பருத்தி விதையை ரோசி விதைப்பெட்டியில் நிரப்பிக்கொண்டிருந்தாள் மூக்கம்மா. பெட்டியை வாங்கிக் கடகத்தில் எண்ணிக் கொட்டிய முத்தையன் அவளை ஒருமாதிரியாகப் பார்த்ததான். அவன் கண்ணில் கோவமும் ஆச்சரியமும் கலந்திருந்து. “என்ன இப்படிச் சொல்ற.” “நேத்து கோழிகூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சீட்ருந்தென். அப்ப புருசனும் பொண்டாட்டியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாக. மனக்கசப்புப் போலருக்கு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 69

Read from the source

Complete lesson

உரிமைத் தாகம் – பூமணி அந்தச் சங்கதி இதுவரைக்கும் முத்தையனுக்குத் தெரியாது. அவன் பெண்டாட்டி சொல்லித்தான் தெரியும். “மேலக்காட்ல கீழத்தாருமேல நம்பிக்க்கெரையம் எழுதியிருக்குதாமில்ல ஒங்க தம்பி.” முற்றத்தில் எருமைச்சாணியுடன் பருத்தி விதையை ரோசி விதைப்பெட்டியில் நிரப்பிக்கொண்டிருந்தாள் மூக்கம்மா. பெட்டியை வாங்கிக் கடகத்தில் எண்ணிக் கொட்டிய முத்தையன் அவளை ஒருமாதிரியாகப் பார்த்ததான்.

அவன் கண்ணில் கோவமும் ஆச்சரியமும் கலந்திருந்து. “என்ன இப்படிச் சொல்ற.” “நேத்து கோழிகூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சீட்ருந்தென். அப்ப புருசனும் பொண்டாட்டியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாக. மனக்கசப்புப் போலருக்கு.

மேலூரு பங்காருசாமிகிட்ட எரநூறு ரூவா வாங்கித் திருப்பிக் குடுக்கமுடியாம கடசிக்கு அந்த ஒரு குறுக்கத்தவும் நம்பிக்க் கெரையம் எழுதிக் குடுத்துச்சாம் ஒங்க தம்பி. ஆறு மாசத்துக்குமேல ஆச்சாம் இது நடந்து. பொண்டாட்டிக்காரி சண்டையத் தொடக்கியிருக்கா.” ரெண்டு வீடுகளுக்கும் நடுவிலிருந்த குறுக்குச்சுவரை வெ றித்திருந்தான் அவன். மேலக்கரிசலில் ஏர்பூட்டிக் கலப்பை முக்கச் சாலடிக்கும்போ து பிச்சிப் பூவாக மண்விரிந்து விழும் அழகில் அவன் மனசு லயித்து.

கம்பு விளைந்தால் தட்டையொண்ணு விரல் தண்டி வாய்க்கும். மூக்கை அறுக்கிறமாதிரி ஒரு முழத்துக்குக் கருது வாங்கும். கருதுகளைப் பிணையல்விட்டால் அயிரைக் குஞ்சுகளாகக் களம் நிறையத் தவசம் பெருகும். மூக்கம்மா அந்த வீட்டில் காலெ டுத்து வைத்துப் பதினஞ்சு வருசமாகிறது.

இன்றைக்கு மூணு பிள்ளைகளுக்குத் தாய். வீட்டுக்கு வந்த நாளில் முத்தையனுக்கு மட்டும் அவள் காய்ச்சிப்போட வில்லை. அவன் தம்பி வெ ள்ளைச்சாமிக்கும் மாமியாருக்கும் சேர்த்ததே பொங்கினாள். வெ ள்ளைச்சாமிக்கு அப்போ து சின்ன வயசு.

என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் வந்து, “மதனி கஞ்சி வே ணும்” என்று சிணுங்குவான். அவள் அலுத்துக்கொள்ள மாட்டாள். வெ ள்ளைச்சாமி எளவட்டமாகி கலியாணம் முடிக்கும் வரை மூக்கம்மாளின் கைக்குள் மகனைப் போல் வளர்ந்ததான். எந்த நேரமும் மதினியின் வாயிலிருந்து, “இந்தாடா வெ ள்ள”தான்.

எல்லாம் கலியாணம் ஆனதுடன் சரி. அத்தனை பாசமும் அடிமனசுக்குள் அமுங்கிவிட்டது. கலியாணமாகி ஒருமாசம் வாந்தக்கமாக இருந்தான். பிறகு பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அண்ணனுடன் தகராறு, பங்கு பாகம், சொத்துச்சொகம்… அப்ப்பா அதெல்லாம் நடக்க் கூடாத கதை.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →