Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 35poem

நான்கு திசையிலும் நான்

Chapter 25: உயிராக நான் · Tamil · TA medium

Read from the source

Complete lesson

நான்கு திசையிலும் நான் நான் வீசுகின்ற திசையைக் கொண்டும் தமிழர்கள் எனக்குப் பெயர் ட்டியுள்ளன ர். கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது நான் கொண்டல் எனப்படுகிறேன். கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களைச் சுமந்து வருவதால் மழைக்காற்று எனப்படுகிறேன். மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும்போது நான் கோடை எனப்படுகிறேன்; வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு . வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளர்ச்சியான ஊதைக்காற்று எனவும் அழைக்கப்படுகிறேன். தெற்கிலிருந்து வீசும்போது நான் தென்றல் காற்று எனப்படுகிறேன்; பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமாக வீசுகிறேன்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →