📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 42grammar_exercise

1. தமிழ்ச்சிறுகதை - தோற்றமும் வளர்ச்சியும்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

. தமிழ்ச்சிறுகதை - தோற்றமும் வளர்ச்சியும் ஆதிமனிதன் தனது அனுபவத்தை அல்லது நடந்த நிகழ்வை அடுத்தவரிடம் விவரித்த போது கதைசொல்லுதல் என்னும் கலை ஆரம்பித்தது. அதைச் சொல்பவர் தமது சொல்லும் திறனுக்கேற்ப உவமைகளோடும் வருணனைகளோடும் சொன்னபோது, அது கேட்பவரைக் கவர்ந்திழுக்கிற ஒரு வலிமையான தொடர்பு வடிவமாக உருவானது. தொடக்கத்தில் தமிழ்மரபில் கதைகள் வாய்ம ழியாகவே சொல்லப்பட்டன.

பின் உரைநடை கலந்த கதைப்பாடல்கள் கதைகளைத் தந்தன. மொழியின் வரிவடிவம் செழுமைப்பட்ட பிறகு, கதை இலக்கியம் எழுத்தில் பதிவானது. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் “பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்” (பொரு. செய்.

) என்ற அடிகளைத் தமிழின் உரைநடை மரபை உணர்த்தும் அடிகளாகக் கொள்ளலாம். பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியானும் என்பதற்கு, கற்பனை கலந்த புனைவு மொழியாக, அதாவது ‘யானையும் குருவியும் தமக்குள் நட்புப் பாராட்டிப் பேசிக்கொள்வதைப் போல‘ எனவும், பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்பதற்கு, 'உண்மை கலந்த வேடிக்கைப் பேச்சு' எனவும் உரையாசிரியர் விளக்கம் தருவர். மரபிலிருந்து மேற்கூறிய இரு கூறுகளையும் எடுத்துக்கொண்டு பாரதியார் தமது கதையை உருவாக்கினார். அவரது ‘காக்காய் பார்லிமெண்ட்‘ கதையில் காகங்களின் பேச்சு ‘உண்மை கலந்த வேடிக்கைப் பேச்சாக‘ இருக்கின்றன.

இந்த மரபுக்கூறுகளுடன் அமைந்த அவருடைய 'ஆறில் ஒரு பங்கு' ( ) கதை, தமிழின் தொடக்ககாலக் கதைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சிறுகதையை மேலை நாடுகளின் இலக்கிய வடிவமாகத் திறனாய்வாளர்கள் வரையறுக்கின்றனர். உலகச் சிறுகதைகள் அமைந்த வடிவத்தைப் பின்பற்றியே தமிழ்ச் சிறுகதைகளும் எழுதப்பட்டன. சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை, ஒரு சிக்கல் என ஒரு பொருள் பற்றி மட்டுமே எழுதுவது.

எந்த நோக்கத்தோடு கதை எழுதப்படுகிறதோ, அதை நோக்கியே கதையின் அனைத்துக் கூறுகளும் செல்லும் ஓர்மை கொண்டது. வாசகன் ஊகித்தறிய முடியாத ஒரு திருப்பத்தை இறுதியில் கொண்டு முடிவது. இந்த வரையறைக்கு உட்பட்டே திறனாய்வாளர்களால் சிறுகதையின் வடிவம் மதிப்பிடப்படுகிறது. தமிழில் மேற்கூறிய சிறுகதைக்கான வடிவ அமைதியுடன் வெளிவந்த முதல் சிறுகதையாக, வ.வே.சு.

என்றழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்ரமணியம் எழுதிய ‘ குளத்தங்கரை அரசமரம்‘ ( ) அறியப்படுகிறது. ஓர் அரசமரம் பேசுவதுபோல் அமைந்த இக்கதை, அதன் சமகாலச் சிக்கலை நுட்பமா கப் பேசிச்செல்கிறது. அ. மா தவையாவின் சிறுகதைகளும் தொடக்ககாலச் சிறுகதைகளாக அறியப்படுகின்றன.

தமிழ்ச்சிறுகதைப் படைப்பாள ர்களைப் பொதுவாக ஐந்து தலைமுறையினராக நாம் பிரித்து மதிப்பிடலாம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →