📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 231poem

9. மின்கற்றல் இணையத்தளம்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

. மின்கற்றல் இணையத்தளம் பல இணையத்தளங்கள், கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குகின்றன. சில தளங்கள் பட்டப்படிப்புகளையும் வழங்குகின்றன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவன ம். உலக அளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வுமையம் ஆகும். இந்நிறுவன ம் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் படித்து இன்புறவும் தனிப்பயிற்சி மூலம் தெளிவு பெறவும் இணையவழிச் செம்மொழித்தமிழ் (Classical Tamil Online) என்னும் மின்கற்றல் (e-Learning) முறையைத் தொடங்கியுள்ளது. இதில் இணைய வகுப்பு உரைகளாகக் (Virtual Class Room Speeches) காணொலிக் காட்சிகளும் உள்ளன . கற்றவற்றைச் சரிபார்த்து விடைகளைக் கண்டறியும் முறையில் தன்மதிப்பீட்டுத் தேர்வுகளும் அமைந்துள்ளன . செம்மொழித் தமிழ்இலக்கியங்களைப் பற்றிக் கல்வி பெறுவதற்கும் இணையவழி மின்னூல்களைப் பெறுவதற்கும் இந்நிறுவனத்தின் இணையத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →