அ. புறச்சித்திரிப்பு சாலைவிபத்தில் மாட்டிக் கொண்டு, கையில் அடிபட்ட ஒருவர் அதை இவ்வாறு விவரிக்கலாம். “காலையில் நெடுஞ்சாலையில் யாருமே இல்லை. சன்னமான மழை ஒரு பாலிதீன் திரை போலக் கரிய தார்ப்பரப்பை மூடியிருந்தது.
கார்களின் முன்வெளிச்சம் நீரின் அடியில் தெரிவதுபோலக் கலங்கித் தெரிந்தது. நான் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமன் சிறுகதை எழுதுவது பற்றி இவ்வாறு எழுதுகிறார். 'சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ, நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம்.
காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஓர்மைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின்பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம்.
நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்று கொண்டு, நிகழ்ச்சியைச் சித்திரித்துக் கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்சினை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.’