அ ஷமஞ்சா பாபு வீட்டிற்குள் நுழையும்போது மணி ஏழைத் தாண்டியிருந்தது. யாரேனும் அழைத்திருந்தார்களா என்று பிபினிடம் கேட்டார். குறைந்தது நாற்பது முறை அவரைத்தேடி வந்தவர்களுக்காகக் கதவைத் திறக்க வேண்டியிருந்தது என்றான். அஷமஞ்சா பாபுவால் தன்னுடைய முன்னெச்சரிக்கைக்காகத் தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஷூவைக் கழற்றியபடி பிபினிடம் ஒரு டீ கேட்டபோது யாரோ கதவைத் தட்டினார்கள். “அடச் சை!” என்று நொந்து கொண்டார் அஷமஞ்சா பாபு. கதவைத் திறந்ததும் அவர் பார்த்தது ஒரு வெள்ளைக்காரரை. “ராங் நம்பர்.” என்று சொல்ல நினைத்து, பின்னால் நின்றிருந்த பெங்காலிக்காரரைப் பார்த்ததும் “யார் வேண்டும்?” என்றார்.
“ நீங்கள்தான், ” என்றார் இந்தியச் சுற்றுலாத்துறையை ச் சேர்ந்த ஷ்யாமோல் நேண்டி, “அதாவது, உங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் நாய் உங்களுடையது என்றால், இன்றைக்குப் பேப்பரில் எப்படிச் சொல்லியிருந்ததோ அப்படியே இருக்கிறது. நாங்கள் உள்ளே வரலாமா?” அஷமஞ்சா பாபு அவர்களைத் தனது படுக்கையறைக்குள் வரும்படி பெருந்தன்மையோடு அழைக்க வேண்டியதாயிற்று. அந்த வெளிநாட்டுக்காரர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார், திரு. 11th Advance Tamil - - - :