அறிவோம் தெளிவோம் நாம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சமூக அக்கறையோடு கருத்துகளை உலகோடு பகிர்ந்துகொள்ள வலைப்பூ மிகச்சிறந்த படைப்புக் களமாக விளங்குகிறது. அச்சில் வெளியாகும் நாளிதழ், வார, மாத இதழ்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சார்ந்த கருத்தாக்கங்களோடு படைப்புகளை வெளியிடுகின்றன . அவை பெரும்பாலும் வாசகர்களுக்கான பொழுதுபோக்குப் படைப்புகளைத் தாங்கி வருபவை. அவற்றில் நமது சொந்தக்கருத்துகளுக்கு ஏற்பப் படைப்புகளை எழுதுவது சாத்தியமில்லை. ஆனால், வலைப்பூ நாம் நமக்காகவே உருவாக்கிக் கொள்ளும் களம். அதில் கட்டற்ற சுதந்தரத்தோடு நமது கருத்துகளை வலிமையாக வைக்கலாம்; உலக அளவிலான வாசகர்களின் பின்னூட்டங்களை உடனுக்குடன் பெறலாம். வலைப்பூவில், ஒரு குறிப்பிட்ட பொருளில் எதிர்பாராத தெறிப்பான முடிவோடு எழுதப்படும் சிறுகதை, பரந்த தளத்தில் ஒரு மையப்பொருளை விரித்து, வாழ்வியல் உண்மைகளைக் கண்டடைய முயலும் புதினம், கதைமா ந்தர்களின் உரையாடல்களா க, காட்சிகளாக அமையும் நாடகம் ஆகியவற்றை நாம் பதிவேற்றலாம். நடப்புக்கால அரசியல், சமூகம், அறிவியல், கலை நிகழ்வுகள், இலக்கியத் திறனாய்வுகள் போன்றவற்றை மையப்படுத்தி அமையும் கட்டுரைகள் வாசகர்களை மிகவும் ஈர்க்கும். நேர்காணல்கள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு, முத்திரை வாசகங்கள், நகைச்சுவைத் தெறிப்புகளை எழுதலாம். முகநூல், புலனம், கீச்சகம் முதலான சமூக ஊடகங்களில் நாம் அஞ்சல் செய்யும் அல்லது பகிரும் நிலைத் தகவல்கள், ஒளிப்படங்கள் போன்றவை சமூகப்பயணம், கல்விப் பயணம் கொண்டவையாக அமையவேண்டும். வெறும் மேலோட்டமான பொழுதுபோக்குச் செயல்கள் அவ்வூடகத்தின் வலிமையை க் குறைக்கும். நம் நேரத்தையும் வீணாக்கும்.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 248poem
அறிவோம் தெளிவோம்
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →