📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 73question

படைப்பு முகம்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

படைப்பு முகம் ஆர்.சூடாமணி ( - ): நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் குறிப்பாகப் பெண்களின் நிலையையும் தமது எளிமையான மொழியில் எழுதியவர். உளவியல் எழுத்தாளர் என்று போற்றப்படும் இவர், ஆங்கிலத்திலும் பல படைப்புகளைத் தந்துள்ளார். “கேசவ்? கேசவன்தானே?

நான் செல்லப்பா” அந்தக் குரலும் மாறவில்லை. ”தெரியும்” என்று எப்படியோ தடுமாறிக் கூறினேன். “நான் ரெண்டு வாரமா ஊர்ல இல்லை. இன்னிக்குச் சாயங்காலம்தான் வந்தேன்.

உன்– உங்க – லெட்டரைப் பார்த்தேன். உடனே கிளம்பி வந்தேன்.” அவர் கண்கள் படுக்கைமீது கிடந்த உருவத்தில் சென்று நிலைத்தன. உதடுகள் லேசாய்த் துடிப்பது தெரிந்தது. அவர் பார்வையில் ஒரு வாழ்நாளின் உணர்ச்சிகள் அனைத்தும் ஒருங்கே கட்டவிழ்ந்து உடைந்தன.

கணப்பொழுதில் அம்மாவுடன் அவர் அங்கே தனியாய் இருந்தார். இது அவ்விருவருடைய கணம். அவர்களுடையதாய் இருந்திருக்க வேண்டிய எத்தனையோ ஆண்டுகளின் ஒரு சின்னஞ்சிறு கடைசிப் பிரதி. “உள்ளே வந்து உட்காருங்க சார்.

நான் இதோ வந்துடறேன் “ என்றுகூறி அந்த அறையை விட்டு நான் வெளியேறினேன். . இறுக மூடிய கதவுகள் என்னும் சிறுகதை கதை மாந்தர் நோக்கில் கதை சொல்லும் முறையில் அமைந்துள்ள பாங்கினை விளக்குக. .

‘‘பாடாத தேனீ பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ” என்ற பாரதிதாசனின் கவிதையோடு இறுக மூடிய கதவுகள் கதையின் கருப்பொருள் பொருந்தும் தன்மையை ஒப்பீடு செய்க. . கனவென்று சொல்லமுடியாத தாறுமாறான பிம்பங்கள், அமுங்கி அமுங்கி வெளிவரும் அம்மாவின் முகம். கூடவோர் எட்டுவயதுச் சிறுவன்.

ஒருவினாடி கண்களைத் திறந்துவிட்டு மூடினேன். மறுபடியும் தூக்கமா? இப்போது வேறொரு முகம். சிவந்த நீளவ ட்டு முகம்.

இதமான புன்சிரிப்பு. பிரகாசக் கண்களில் ஆழமான பார்வை. சுருட்டை கிராப். நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முகமும் நழுவியது.

---இறுக மூடிய கதவுகள் கதையின் இப்பகுதியில் காட்சித் துணுக்கு முறை என்ற கதைசொல்லும் உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது, இதுபோன்று இக்கதையில் வரும் வேறு உத்திகளைக் குறிப்பிட்டு எழுதுக. . இறுக மூடிய கதவுகள் கதையில் ‘‘உள்ளே வந்து உட்காருங்க சார், நான் இதோ வந்துடுறேன். என்று கூறி அந்த அறையை விட்டு நான் வெளியேறினேன்.” என்று கதை முடியும் இடத்திலிருந்து கேசவன் அறையைவிட்டு வெளியேறியபின் அவன து அம்மா சுயநினைவு திரும்பி, செல்லப்பாவுடன் உரையாடுவது போல் கற்பனையாகக் கதையை நீட்டி எழுதுக.

. அவரை... அந்த நல்ல அங்கிளை அப்பாவாய்ப் பண்ணட்டுமா... ஊஹும் கூடாது என்பதற்குப் பதிலாகச் சரி என்று கூறுவதாகக் கொண்டு கற்பனைக் கதையைத் தொடர்க.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →