📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 247poem

ப்பூவினைப் பயன்படுத்தும் முறை

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

ப்பூவினைப் பயன்படுத்தும் முறை . நமது படைப்புகளை வெளியிட்டு, அதை உலகளாவிய வாசகர்களை வாசிக்கச் செய்யலாம். . வலைப்பூக்களைத் தொகுத்து வாசகர் பார்வைக்குத் தரும், திரட்டிகளில் நம் வலைப்பூவை இணைப்பதன்மூலம் வாசகர் எண்ணிக்கையினை அதிகரிக்கலாம். . வலைப்பூவின் தளவமைப்பினைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான பொருண்மைகளில் பக்கங்களை உருவாக்க இயலும். . நாம் வெளியிடும் படைப்புகளைக் கால, பொருள் அடிப்படையில் தலைப்பிட்டுச் சேமித்து வைக்கலாம். . வகுப்பறைக்கெனத் தனி வலைப்பூவினை உருவாக்கி, மாண வர்களின் பாடம் சார்ந்த செயல் திட்டங்களைப் பதிவேற்றலாம். மற்ற மாண வர்கள் பின்னூட்டம் இடலாம். ஆசிரியர்கள் செயல் திட்டங்களை மதிப்பிடலாம். . பள்ளிக்கெனத் தனி வலைப்பூவினை உருவாக்கி, வகுப்பறை வலைப்பூக்களை இணைக்கலாம். அதில் சிறந்த பள்ளிச் செயல்பாடுகள் அனைத்தையும் பலர் அறியவும் மதிப்பிடவும் வழங்கலாம். பள்ளி ஆண்டு மலர்களை வெளியிடலாம். . நம் படைப்புகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் பின்னூட்டம் இதன் சிறப்பு. அவ்வகையில் நாம் எவற்றை வெளியிடலாம் என்பதில் சுதந்தரமும் கட்டுப்பாடும் நம்கையில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →