📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 233poem

தமிழ் இணையக் கல்விக்கழகம்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி 17இல் நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையம் வழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பா க இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெ ற்ற இ ர ண ட ம் தமிழ் இணைய மா நாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட டது. முழுநேர இயக்குநர் ஒ ரு வ ரி ன் பொறுப்பில் செயற்படும் இது, தமிழ் இணையக் கல்விக்கழக ஆட்சிக்குழுவால் வழி நடத்தப்படுகிறது. இணையக் கல்விக்கழகம் பின்வரும் குறிக் கோள்களை அடைவதற்கான திட்டங்களுடன் செயல்படுகிறது. • உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும் தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்ம ழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல். • உலகெங்கும் வாழும் தமிழர்கட்கு, அவர்களின் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல். • உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல். • தமிழ்ம ழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல். • மொழியறிவுக்காகவோ, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு வாய்ப்பளித்தல். • தகுதிக்கு ஏற்பத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/ பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல். மேலும் ஐம்பது இலட்சம் பக்கங்களுக்குமேல் பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத் தளத்திற்குச் செல்ல இதனைத் திறன்பேசியால் வருடவும். 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →