தேடுபொறி இணையத்திலும் கணினியிலும் நமக்குத் தேவையானவற்றைத் தேடித்தரும் செயலைச் செய்கின்ற ஒரு கணினி நிரலே தேடுபொறி. அது உலகமெங்கும் நிறுவப்பட்டுள்ள வழங்கிகளுக்குச் சென்று, அவற்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளில் நாம் கொடுத்துள்ள குறிப்பின்படி நமக்குத் தேவையான இணையத்தளங்களின் பட்டியல்களைத் தொகுத்துத் தரும். இணையமுகவரி ஏதும் தெரியாதபோது தேடுபொறியில் நமக்கு வேண்டிய தரவைக் குறிக்கக்கூடிய சொற்களை இட்டு அவை குறித்த செய்திகளைப் பெறலாம். கூகுள், அல்டாவிஸ்டா, யாகூ, பிங், பாய்டு, அலெக்ஸா, லைகோஸ், ஆஸ்க்ஜீவ்ஸ், எம்எஸ்என் போன்றவையும் குழந்தைகளுக்கெனச் சிறப்பா க வடிவமைக்கப்பட ட கிடில் தேடுபொறியும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தேடுபொறிகளாகும்.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 230poem
தேடுபொறி
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →