📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 52grammar_exercise

எழுத்தின் இரகசியம்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

எழுத்தின் இரகசியம் எழுத்தின் இரகசியம் எழுத்தில்தான் உள்ளது. எனவே, சிறுகதை வடிவத்தின் அனைத்துக் கூறுகளையும் தன்வயப்படுத்தி, சுயமா ன படைப்பூக்கத்துடன் கதைகள் வெளிப்படவேண்டும். எந்தவொரு படைப்பாக இருந்தாலும் அதன் களத்தில் நின்று, உணர்வுப்பூர்வமான மொழியில் சமூக உயர்வினை நோக்கி எழுதப்படும் போது அது வெற்றிகரமாக அமையும். கதைகேட்பதும் கதைசொல்லுவதும் தொன்றுதொட்டு வந்தபழக்கம்.

‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா இருந்தான்’ என்று ஆரம்பிக்கும் இளமை மாறாத கதைகள் முதல் இன்று இருக்கும் எழுத்தாசிரியர்களின் கனவுகளான சிறுகதைகள்வரை, எல்லாம் மனித உள்ளத்தின் அடையமுடியாத ஆசைகளின் எதிரொலி. கதை என்றால் என்ன? எதுதான் சிறுகதை? சிறுகதையின் எல்லை என்ன?

சிறுகதைக்கென்று தனிப்பட்ட ரூபம் ஒன்று உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு கதை ஆசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன.

அச்சுப்பிழை பார்க்கிறவர்களை ஒதுக்கிவிட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வள வு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதன ல், எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவ ற்றின் அளவுக்கு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையுள்ள கதைகள் அவை எழுதப்பட்ட காலத்திலிருந்த பத்திரிகை காரியாலயங்கள் எல்லாவற்றையும் சேத்திர தரிசனம் செய்துவிட்டு திரும்பியவை ஆகும்.

எழுத்துக்குப் பயிற்சி மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட எந்திரம் மாதிரி தானே ஓர் இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம். இதுவரை நான் கையாண்டுவரும் இந்த முறை பிசகியதே இல்லை.

என் கதைகளிலே ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றிற்குக் காரணம் வார்ப்புப் பிசகு அல்ல. அதை எழுதத் தூண்டிய மன அவசரத்தின் உத்வேகத்தைப் பொறுத்தது கதையின் கவர்ச்சியில் காணும் ஏற்றத்தாழ்வு. நான் முன்விசாரித்த உதாரணங்களே போதும் என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும் வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்துகொண்டே இருக்கும்.

அந்தக் கிடங்கில் இருந்து நான் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளுவேன். கதை எழுதும் சிலர் அவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டுவைப்பார்கள்; நான் அப்படியல்ல. ஞாபக மறதிக்கு அரிய வசதியளிப்பேன். எழுத்துரூபத்தில் அமையும்வரை மனதில் உறுத்திக்கொண்டுக் கிடக்கும் நிலையில் இருந்த கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை.

11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →