கவிதை - ஒரு பார்வை கவிதை ஒரு மொழியின் மேன்மையான வெளிப்பாடு. மொழியின் அனைத்துக்கூறுகளையும் கொண்டு உருவாகும் கலை கவிதையைப்போ ல் வேறேதுமில்லை. அதனால்தான் ஒரு மொழியின் மாண்பும் செறிவும் அழகும் அம்ம ழியின் கவிதைகளைக் கொண்டே மதிப்பிடப்ப டுகின்றன. தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியம் மிக்கப் பண்பாட்டின் வேர்கள், தமிழ்க் கவிதைகளின் வழியாகவே கிளை விரிக்கின்றன. தனது கவிதை இலக்கியத்தால்தான், உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் வைத்து, தமிழ் போற்றப்படுகிறது. உலகின் பிற மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழ்க்கவிதைகளின் தொன்மை, மரபு, பிறம ழிச்சார்பின்மை, இடையறா த தொடர்ச்சி ஆகியன தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதைப்போலவே இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வியலைக் கொண்ட கவிதைகள், தமிழில் தான் முதலில் எழுதப்பட்டன.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 12poem
கவிதை - ஒரு பார்வை
Chapter 4: Front Matter · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →