📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 12poem

சங்ககாலக் கவிதைகள்

Chapter 4: Front Matter · Advanced Tamil

சங்ககாலக் கவிதைகள் சங்ககாலக் கவிதைகள் தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை. இவை அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம், வேளாண்மை குறித்த பதிவுகளை வெளிப்படுத்துகின்றன. அகம்: மாந்தர், அகமனத்தில் துய்க்கின்ற காதல், அன்பு, கருணை முதலான உணர்வுகளை வெளிப்படுத்துவது அகத்திணை. புறம்: மா ந்தர், புறவாழ்வில் கொண்டாடுகின்ற வீரம், கொடை, புகழ் முதலான பண்புகளை வெளிப்படுத்துவது புறத்திணை. அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பா வகைமைகளில் அமைந்தவை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →