ஹ ஷிமாராவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் செல்லும்போது, அஷமஞ்சா பாபு தன் நெடுநாளைய அவாவினைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. பவானிபூர், மோஹினிமோஹன் சாலையில் உள்ள ஒரு சிறிய ஃப்ளாட்டில்தான் அஷமஞ்சா பாபு குடியிருந்தார். லஜ்பத் ராய் தபால் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை, அலுவலகத்திற்குக் கல்கத்தாவின் நெரிசலான பஸ்ஸிலோ, ட்ரெய்னிலோ சண்டை போடாம ல் வீட்டிலிருந்து கால்நடையாகவே ஏழு நிமிடத்தில் போய்விடலாம் என்று அமைந்தது அவர் அதிர்ஷ்டம்தான். எனவே பாபுவின் வாழ்க்கை கவலைகள் இல்லாதது, அவரும் ‘வாழ்க்கை தனக்கு இவ்வாறு அமையாதிருந்தால்’ என்றெல்லாம் யோசித்து அலட்டிக் கொள்கிறவரில்லை.
ஆக மொத்தத்தில் இருப்பதில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறவர். அவரைத் தொந்தரவு செய்து கொண்டிருந்த ஒரே விஷயம், ஒரு துணை இல்லாததுதான். சில நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்களோடு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கும் பிரம்மச்சாரியான அவருக்கு, ஒரு நாய், தனக்குத் துணையாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இரண்டுவீடு தள்ளி இருந்த தாசில்தார் வளர்ப்பதுபோல, அல்சேஷன் போன்ற பெரியவகை நாய்கள் அவருக்குத் தேவையில்லை.
அவர் ஆசையெல்லாம், காலையும் மாலை யும் அவர் பின்னால் சுற்றி வந்துகொண்டு, அவர் வேலைமுடிந்து வீட்டுக்கு வருகையில் வாலை ஆட்டியபடி வரவேற்று, அவர் இடும் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செய்யும் ஏதேனும் ஒரு சிறியவகை நாய். பாபுவின் ரகசிய ஆசை என்னவென்றால் அவர் தன் நாயிடம் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்பது. ‘ஸ்டாண்ட் அப்!’, ‘சிட் டௌன்’, ‘ஷேக் ஹேண்ட்ஸ்!’ – அவருடைய இக்கட்டளைகளை அது கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அஷமஞ்சாபாபு, நாய்கள் ஆங்கில இனத்தைச் சேர்ந்தவை என்று நம்ப விரும்பினார்.
ஆம், ஒரு ஆங்கில நாய், அதற்கு அவர் எஜமானன். அந்த எண்ணமே அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது. மழை தூறலாக விழுந்துகொண்டிருந்த ஒருநாளில், ஹஷிமா ராவில் உள்ள சந்தைக்கு ஆரஞ்சுப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தபோது, சந்தையின் மூலையிலுள்ள குட்டையான இலந்தை மரத்தடியில் பூட்டானை ச் சேர்ந்த ஒருவன் கையில் சிகரெட்டோடு அமர்ந்திருந்தான். பக்கத்தில் காலணிகள் வைக்கும் அட்டைப்பெட்டியில் இருந்து நாய்க்குட்டி ஒன்று எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.
‘காலை வணக்கம்’’ என்று ஆங்கிலத்தில் சொன்னான், கண்கள் சிரிக்கும்போது கீறலாக மாறின. பாபுவும் மறுபடி வணக்கம் சொல்ல வேண்டியதாயிற்று. ‘பை டாக்? டாக் பை?
வெரிகுட் டாக்’, பெட்டியில் இருந்த நாயை எடுத்து தரையில் விட்டான், ‘வெரி சீப், குட் டாக், ஹேப்பி டாக்’. நாய்க்குட்டி வெளியே வந்ததும் தன் உடலில் இருந்த மழைத்துளிகளை உலுக்கி உதறிவிட்டு பாபுவைப் பார்த்துத் தன் இரண்டு இஞ்ச் வாலை வேகமாக ஆட்டியது. பாபு அதனருகில் சென்று குனிந்து தன் கைகளை நீட்டியதும் தன் இளஞ்சிவப்பு நாவால் அவர் கைகளை நக்கியது, நட்பான நாய்தான். “விலை என்ன?
ஹவ் மச்?” 11th Advance Tamil - - - :