இணைய வரலாறு அமெரிக்க இராணுவம் தனது கட்டளைகளையும் தகவல்களையும் பிற நாடுகள் அறியாவண்ணம் பாதுகாக்கவும், பரிமா றிக் கொள்ளவும் எண்ணியது. அதற்காகச் சார்லஸ் ஹெர்ஸ் ஃபீல்டு என்பவரை இயக்குநராகக் கொண்டு 1957இல் ஆர்பா நெட் (ARPA – Advanced Research Projects agency Network) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இவ்வமைப்பு எம்ஐடி ( M I T - Massachuseits Institute of Technology) என்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து, புவிப் பரப்பில் பிரிந்துகிடக்கும் கணினிகளை இணைத்தது. அதன் அடிப்படையில் தகவல்களைப் பரிமா றிக் கொள்ளத் தேவையான தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்தது. ஆய்வின் முடிவில் தகவல் பரிமாற்றத்திற்காக 1966இல் தரவு மாற்றத் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தது. இத்தொழில்நுட்பம் இராணுவத்திற்கு மட்டுமல்லாது பல்கலைக் கழகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1969இல் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கிய ஆர்பா நெட், 1971இல் ஹார்வர்டு பல்கலைக்கழகம், நாஸா உள்ளிட்ட இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்பின் 1974இல் வின்டர்ன் செர்ப், பார்ப் கான் ஆகியோர் விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தனர். இல் தகவல் பரிமா ற்றத் தொழில்நுட்பத்துடன் செய்திப் பரிமாற்றத் தொழில்நுட்பம் (TCP), இணைய நெறிமுறை ( I P ) என்னும் இரு நெறிமுறைகளை உருவாக்கினர். 1982இல் ஓர் அறைக்குள் இருக்கும் கணினிகளை ஈதர்நெட் என்னும் வலை இடைமுக அட்டைகளைப் பயன்படுத்தி இணைத்தனர். இவ்விணைப்பிற்குக் குறும்பரப்பு வலைப்பின்னல் என்று பெயர். அதன்பின் இத்தகைய குறும்பரப்பு வலைப்பின்னல்கள் இணைக்கப்பட்டு அகன்ற பரப்பு வலைப்பின்னல்களாக உருவாக்கப்பட்டன. இத்தொழில்நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து 1991இல் டிம் பெர்னர்ஸ் லீ என்பவரால் அகன்ற பரப்பு வலைப் பின்னல்கள் இணைக்கப்பட, அது உலகளாவிய வலையமைப்பாக (www) உருவெடுத்தது. அதனால், இன்று இணையப் பயன்பாடு எளிதாகியுள்ளது.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 228poem
இணைய வரலாறு
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →