📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 251poem

இணையப்பாதுகாப்பு

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

இணையப்பாதுகாப்பு அனைத்துத் துறைகளிலும் தவிர்க்க இயலாத வலிமையான சாதனமாக இணையம் இன்று விளங்குகிறது. இக்காலக்கட்டத்தில் இணையத்தை ஆக்கப் பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டியது இன்றியமையாதது. இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த, பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றலாம். இணையம் சார்ந்த அனைத்துப் பரிமாற்றங்களையும் நமக்கான தனிப்பட்ட கணினி, திறன்பேசி ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளுதல் நலம். நமது அனைத்துப் பயனர் கணக்குகளின் கடவுச்ச ற்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பாதுகாப்பற்ற இணையத்தளங்களில் பதிவேற்றவோ, பதிவிறக்கவோ கூடாது. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வரும் தகவல்களைத் தவிர, பிறவற்றைக் மிகக்கவனமாகக் கையாளவேண்டும். இணையத்தை முடக்குதல், தகவல்களைத் திருடுதல் போன்ற இணையக்குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற வேண்டியது மிகவும் தேவை. கணினி, திறன்பேசி ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது குறிப்பிட்ட கால இடைவெ ளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். நம்பகமற்ற தகவல்களைப் பெறும்போது விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கணினி, திறன்பேசி ஆகியவற்றில் உள்ள விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்த பகுதிகளைப் புத்துணர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றில் தொடர்ச்சியாக ஈடுபடுவது நமது உடல், மனநலத்தையும் செயல்திறனை யும் பாதிக்கும். மேற்கண்டவற்றை மனத்திற்கொண்டு இணைய வெளியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, நவீன அறிவியல் வாழ்வோடு நம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெற்றி பெறுவோம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →