சிறகிழந்த நாரை எட்டுத்தொகையில் ஒன்றான குறுந்தொகையில், தலைவி மீதான தலைவனின் அன்பும், சிறகிழந்த நாரையாய்த் தலைவிக்காக அவன் வருந்துவதையும் காட்டும் பரணரின் ஓர் அகத்திணைப்பாடல், குணகடல் திரையது பறைதபு நாரை திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லMோயே. குறுந்தொகை. கீழ்க்கடலில் எழுந்த அலைக்கு அருகில்நின்ற, முதுமையால் சிறகிழந்த நாரையொன்று, சேரனது மேல்கடற்கரையிலமைந்த தொண்டியென்னும் நகரில் உள்ள பெறற்கரிய உணவாகிய அயிரை மீனைப்பெற வருந்தியிருந்தது. அதுபோல, பெறற்கரியவளாகிய தலைவியைப் பெறும்பொருட்டுத் தலைவனின் நெஞ்சமும் வருந்தியிருந்ததாம்.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 12poem
சிறகிழந்த நாரை
Chapter 4: Front Matter · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →