📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 94question

சி ரிக்கும்நாய் பற்றிய சம்பவத்தைக்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

சி ரிக்கும்நாய் பற்றிய சம்பவத்தைக் கேள்விப்பட்டவர்களில் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையின் உயரதிகாரியும் ஒருவர். அஷமஞ்சா பாபுவைப் பேட்டியெடுக்கும்படி நிருபரான ரஜத் சௌத்ரியை அனுப்பினார். ஒரு நிருபர் தன்னைச் சந்திக்க நினைத்ததே அஷமஞ்சா பாபுவுக்கு மிகுந்த ஆச்சரியமாய் இருந்தது. அஷமஞ்சா பாபு, நிருபரைத் தனது படுக்கையறைக்குள் அழைத்து வந்தார்.

அந்த மரநாற்காலி இப்போது சரிசெய்யப்பட்டுப் புதிய கால் பொருத்தப்பட்டிருந்தது. அஷமஞ்சா பாபு நிருபரை அதில் அமரும்படி சொல்லிவிட்டுத் தான் படுக்கையில் அமர்ந்துகொண்டார். ப் ரௌனி, சுவரில் ஏறிக் கொண்டிருந்த எறும்புகளின் வரிசையொன்றைக் கவனித்துக் கொண்டிருந்தது; இப்போ து உடனே படுக்கையில் தவ்வி அஷமஞ்சா பாபுவுக்கு அருகே அமர்ந்து கொண்டது. ரஜத் சௌத்ரி தனது ரெக்கார்டரின் பொத்தானை அழுத்தப் போகும்போது ஒரு எச்சரிக்கையை முன்பே கொடுத்துவிடுவது நல்லது என்று அஷமஞ்சா பாபுவுக்குத் தோன்றியது.

எனவே, “அதாவது சார், என்னுடைய நாய் முன்பெல்லாம் அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தது, ஆனால், கடந்த சில மாதங்களாகச் சிரிக்கவே இல்லை. ஒருவேளை நீங்கள் அது சிரிப்பதைப் பார்க்கவேண்டுமென வந்திருந்தால் அது உங்களுக்கு ஏமாற்றமாக அமையலாம்,” என்றார். “அதனாலென்ன, பரவாயில்லை. நான் உங்களிடமிருந்து சில விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவே.

ஆரம்பிக்கும் முன், நீங்கள் உங்கள் நாயை என்னவென்று கூப்பிடுகிறீர்கள்?” அஷமஞ்சா பாபு மைக்கின் அருகில் செல்வதற்காகக் கழுத்தை நீட்டி, “ப் ரௌனி” என்றார். ” ப் ரௌனி… ” நிருபரின் கழுகுக்கண்கள் நாய் தன் பெயரைச் சொன்னதும் வாலாட்டுவதைக் கவனித்தன. “இவனுக்கு என்ன வயதாகிறது?” “பதிமூன்று மாதம்.” “ இந்த நாயை எ- எ- எங்கே கண்டெடுத்தீர்கள்?” அவர் அப்படித் திக்கியது எதிர்பாராத விதமாக ப்ரௌனியின் அதிசயமான குணத்தை வெளிக்கொண்டு வர உதவியது. அந்தவகையில் போக்கன்வாலாவுக்கு அடுத்து ப்ரௌனியின் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →