📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 47poem

சிறுகதையின் வடிவம்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

சிறுகதையின் வடிவம் சிறுகதையின் வடிவம் பின்வரும் நான்கு அடிப்படைகளைக் கொண்டதெனக் கூறலாம். . சிறுகதையின் போக்கு ஓர்மை கொண்டதாக இருக்கவேண்டும். தேவையில்லாத எந்தவொரு விவரமும் அதில் இருக்கவேண்டியதில்லை. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்வது நன்று. . முடிவில் உள்ள திருப்பம், வாசிப்பவன் ஊகிக்கமுடியாத ஒன்றாக இருக்கவேண்டும். அத்திருப்பத்தில்தான் சிறுகதையின் வெற்றி உள்ளது. . வாசகனை எந்த அளவுக்குக் கற்பனை செய்ய வைக்கிறதோ அந்த அளவிற்குச் சிறுகதை வெற்றி பெறுகிறது. . ஒரு சிறந்த சிறுகதை அதன் கடைசிவரிக்குப் பிறகே வாசகனின் மனத்தில் மீண்டும் தொடங்குகிறது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →