📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 110question

, மாணவியர்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

, மாணவியர் ஆசிரியர்: வணக்கம் மாண வர்களே! மாண வர்கள்: வணக்கம் அம்மா! ஆசிரியர்: உங்களில் யாரெல்லாம் நாடகம் பார்த்திருக்கிறீர்கள்? மாண வர்: எல்லாரும் நாடகம் பார்த்திருக்கிறோம் அம்மா.

தொலைக்காட்சி இருக்கும் வீடுகள் எல்லாவற்றிலும் நாள்தோறும் நாடகங்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஆசிரியர் : அப்படியா! நீங்கள் பார்த்த நாடகங்களின் பெயரை ஒவ் வொன்றாகச் சொல்ல முடியுமா? .

(மாண வர்கள், சில தொலைக்காட்சித் தொடர்களின் பெயர்களைச் சொல்கிறார்கள்) ஆசிரியர்: சரி, அந்தத் தொலைக்காட்சிகளில் நீங்கள் காண்பனவற்றை ‘நாடகம்’ என்றுதான் சொல்வார்களா? மாண வி: இல்லை. நாடகம் என்று சொல்லவில்லை; தொடர் என்றுதான் சொல்வார்கள். ஆசிரியர்: அவர்களே தொடர் என்று சொல்லும் போது, நீங்கள் மட்டும் நாடகம் என்று சொல்லலாமா?

மாண வி: தினந்தோறும் அவற்றைப் பார்ப்பவர்கள் பொதுவாக ‘நாடகம்’ என்றுதான் சொல்கின்றனர். அதனால் தான் நானும் நாடகம் என்று சொன்னேன். ஆசிரியர்: அவர்களுக்கு நாடகங்களின் வகைகள், உத்திகள் போன்றவை தெரியாததால் தொலைக்காட்சித் தொடர்களை நாடகம் என்று சொல்கிறார்கள். அவர்கள் பார்ப்பவை நாடகங்கள் அல்ல என்பதை நாடகக் கலையைப் பற்றித் தெரிந்து கொண்டபின் நீங்கள்தாம் உணரச்செய்ய வேண்டும்.

மாண வர்: நாங்கள் நாடகக் கலையை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் அம்மா! எங்களுக்குச் சொல்லித்தாருங்கள். ஆசிரியர்: மாண வர்களே! இந்த நூலைப் பாருங்கள்.

என்ன நூல் இது? மாண வி: இது நாடக நூல். ஆசிரியர்: எப்படிச் சொல்கிறாய்? மாண வி: அடைப்புக்குறிக்குள் காட்சி, இடம், கதைமாந்தர்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்களே!

அப்படி இருப்பது நாடகநூல் தானே...! நூலகத்தில் இப்படி அச்சிடப்பட ட நூல்களை நாடகம் என்ற பகுதியில் பார்த்திருக்கிறேன். ஆசிரியர்: ஓ!அப்படியா? உங்களுக்கு என் பாராட்டுகள்.

(நாடகநூலை உயர்த்திக் காட்டுகிறார்) நூலின் இடப்பக்க ஓரத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் பேசுவதாக இருப்பதுதான் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →