மின்னஞ்சல் கணினிகளுக்கிடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல் சேவையாகும். இணையத்தில் மின்னணுத் தொடர்புக் கருவிகளைக்கொண்டு செய்திகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் முதலானவற்றைச் சிலநொடிகளில் பரிமாறிக் கொள்ளலாம். கூகுள், யாகூ, ரெடிஃப்மெயில், வேர்டுபிரஸ் போன்ற உலகின் பெரும்பான்மையான மின்னஞ்சல் நிறுவனங்கள் இச்சேவையைக் கட்டணமின்றி வழங்குகின்றன. இத்தகைய நிறுவனங்கள் ஏதாவது ஒன்றில் நாம் மின்னஞ்சல் பயனர் கணக்கைத் தொடங்கவேண்டும். அதற்கான படிவத்தில் நம் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் மின்னஞ்சல் முகவரி ஒன்றையும் கடவுச்ச ல் ஒன்றையும் நாம் பெறலாம். தற்போது பல இணையத்தளங்கள் பயனரின் நம்பகத் தன்மையை மின்னஞ்சல் முகவரியைக் கொண்டே உறுதி செய்கின்றன. இதனால் இணையத்தின் சேவையை முழுமையாகப் பயன்படுத்த மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 245poem
மின்னஞ்சல்
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →