📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 248definition

மூடுல் (Moodle)

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

மூடுல் (Moodle) மூடுல் என்பது Modular Object-Oriented Dynamic Learning Environment என்ற ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். 1999ஆம் ஆண்டிலிருந்து மெல்ல வளர்ந்து வரும் மூடுல் தற் போது உலகின் மொழிகளில் செயலாற்றி வருகிறது. கற்கும் மாணவ ர்களை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மென் பொருள் இணையவழிக் கல்விக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆசிரியர்கள் திறம்படச் செயல்பட மூடுல் உதவுகிறது.

மூடுல் ஒரு திறவூற்று மென்பொருள் என்பதால், இதை அனைவரும் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம். இதனை எடுத்து மாற்றங்களையும் செய்து கொள்ளலாம். மூடுலின் முக்கியக் கூறுகளான மாணவ மன்றம் (Forum) கலந்துரையாடல் (Chat) விக்கி (Wiki) வலை ப்பூ (Blog) ஆகியவற்றைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தவும் தேவையில்லை என்றால் மூடிவைக்கவும் முடியும். எல்லா வகையான விளக்க க் குறிப்புகள், தரவுகள் ஆகியவை மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மூடுல் செயலாற்றுகிறது.

11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →