நான்காம் தலைமுறை இத்தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் மென்மையான மொழியில் வாழ்வின் நுட்பமான தருணங்களை எழுதினர். வண்ணநிலவன், வண்ணதாசன், விட்டல்ராவ், பூமணி, நாஞ்சில்நாடன், ஆதவன், பிரபஞ்சன், திலீப்குமார், ஜெயந்தன், தஞ்சை பிரகாஷ், தோப்பில் முகமது மீரான், ராஜேந்திர சோழன், சூர்யகாந்தன், சி.ஆர். ரவீந்திரன், சி.எம்.முத்து போன்றோர் சிறந்த படைப்புகளைத் தந்தனர். ஜெயகாந்தனுக்குப்பின் எழுதிய சிறந்த முற்போக்குப் படைப்பா ளிகளாகக் கந்தர்வன், ச. தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தனுஷ்கோடி ராமசா மி, வேல. ராமமூர்த்தி, சோலை சுந்தரபெருமாள், தேனி சீருடையான் போன்றோரைக் குறிப்பிடலாம். மிகநவீனமான புனைவு நடையை க் கொண்டவர் சுஜாதா. பெண்ணியவாத எழுத்தாளர்களாக அம்பை, திலகவதி போன்றோர் அறியப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்த வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோரது படைப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 44poem
நான்காம் தலைமுறை
Chapter 1: கதையியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →