📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 207question

ஆக்கப்பெயர்கள் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

பத்தியில் உள்ள ஆக்கப் பெயர்களை எடுத்தெழுதுக : எங்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குக் காவல்துறை ஆணையாளர் சிறப்பு அழைப்பாள ராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், “மாணவர்களாகிய நீங்கள் படிப்பகங்களைப் பயன்படுத்தி விண்ணியல், மண்ணியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கவேண்டும். நல்ல நண்பர்களைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டு உதவியாள் இல்லாமலே ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ முதலாளியாகவோ ஆகலாம்” என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். பயிற்சி அடைப்புக்குள் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளைக் கொண்டு விடுகதைகளுக்குரிய ஆக்கப்பெயர்களைக் கண்டறிக : .

வேவு பார்த்திடுவான்; ஓசையின்றிச் சென்றிடுவான் (ஆளி) - . அறிவைத் தேடிப் போகுமிடம்; உலகம் அறிய உதவுமிடம் (அகம்) - . வந்தால் மகிழ்ச்சி இது; உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) - . வேட(ஷ)ம் போட்டவன் வேடதாரி; பட்டம் வாங்கினவன் ?

(தாரி) - . அளந்து அளந்து கொட்டிடுவான்; அகம் மகிழத் தந்திடுவான் (ஆள்) - கற்பவை கற்றபின்... . நீங்கள் வாழும் சூழலில் பயன்படுத்தப்படும் ஆக்கப்பெயர்களைப் பட்டியலிடுக.

. படிப்பவர், படிப்பாளி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்க. XI Std Tamil பலவுள் தெரிக . ’ஜனப்பிரளயம் ’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?

அ) மக்கள் அலை ஆ) உயிர் அலை இ) மக்கள் வெள்ளம் ஈ) மக்கள் அவை . கூற்று: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல். காரணம்: சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல். அ) கூற்று சரி; காரணம் தவறு ஆ) இரண்டும் சரி இ) இரண்டிற்கும் தொடர்பில்லை ஈ) கூற்று தவறு; காரணம் சரி .

‘அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்’ – யார் யாரிடம் கூறியது? அ) அமைச்சர் கவிஞரிடம் ஆ) மன்னர் அமைச்சரிடம் இ) அமைச்சர் மன்னரிடம் ஈ) மன்னர் அமுதவல்லியிடம் . அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் - இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தம் அ) அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில் ஆ) அடையாறுப் பாலத்தின் சுவரில் இ) அடையாறுப் பாலத்தின் சுவற்றில் ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில் . ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க.

அ) காவலாளி ஆ) மேலாளர் இ) உதவியாள் ஈ) ஆசிரியர் குறு வினா . ’நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்’ என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக. . உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை ?

. அலைகடல், புதுக்கியவர் – இலக்கணக் குறிப்புத் தருக. . செந்துறைப் பாடாண்பாட்டு – துறை விளக்கம் எழுதுக.

சிறு வினா . ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை? . “உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள்விளக்கம் தருக.

. பெருங்காடு, உழுதுழுது – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக. . ‘சேரநாடு செல்வ வளம் மிக்கது’ என்ற கூற்றிற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.

. ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன – ஏன் ?

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →