ஆக்கப்பெயர்கள் XI Std Tamil அறிவியல், திறமைசாலி, கோழைத்தனம், சமத்துவம், பெண்ணியம், பேச்சாளன், ஏற்றுமதி முதலான சொற்கள் ஆக்கப்பெயர்ச்சொற்களே என்பதை உணரவேண்டும். இச்சொற்களில் இயல், சாலி, தனம், துவம், இயம், ஆளன், மதி ஆகிய விகுதிகள் சேர்ந்து ஆக்கப் பெயராக்கப்பட்டுள்ளன. கண்டறிக: குரங்காட்டி, வண்டியோட்டி, பழந்தின்னி, வாயாடி, குடித்தனம், நீதிமான் இச்சொற்களைப் பிரித்து ஆக்கப்பெயர் விகுதிகளைக் கண்டறிக. ஆக்கப்பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு மூவகையாகப் பிரிக்கலாம்.
அவை . பெயருடன் சேரும் விகுதிகள் . வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் . பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள் .
பெயருடன் சேரும் விகுதிகள் (காரன், காரர், காரி, ஆள், ஆளர், ஆளி, தாரர்) பெயர் + விகுதி = ஆக்கப்பெயர் வண்டி + காரன் = வண்டிக்காரன் சமையல் + காரர் = சமையல்காரர் வேலை + காரி = வேலைக்காரி பணி + ஆள் = பணியாள் ஆணை + ஆளர் = ஆணையாளர் குற்றம் + ஆளி = குற்றவாளி விண்ணப்பம் + தாரர்= விண்ணப்பதாரர் காரன், காரி, காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் உடைமை, உரிமை, உறவு அல்லது தொடர்பு, தொழில் அல்லது ஆளுதல் என்னும் நான்கு பொருள்களில் வரும். வீடு + காரன் - வீட்டுக்காரன் - உடைமை தமிழ்நாடு + காரி- தமிழ்நாட்டுக்காரி- உரிமை உறவு + காரர்- உறவுக்காரர்- உறவு தோட்டம் + காரர்- தோட்டக்காரர்- தொழில் தொழிற்பெயர் விகுதிகளுடன் ‘ஆளர்’ என்னும் ஆக்கப்பெயர் விகுதி சேர்ந்து சொற்கள் உருவாகின்றன. தொழிற்பெயர் விகுதி தொழிற்பெயர் ஆக்கப்பெயர் சி ஆட்சி ஆட்சியாளர் அல் செயல் செயலாளர் தி செய்தி செய்தியாளர் மதி இறக்குமதி இறக்குமதியாளர் வை பார்வை பார்வையாளர் வு தேர்வு தேர்வாளர் பு அழைப்பு அழைப்பாளர் ‘ஆளர்’ ‘ஆளி’ முதலான விகுதிகள் இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துணை நிற்கின்றன. ஆளர் உதவி + ஆளர்= உதவியாளர் காப்பு + ஆளர் = காப்பாளர் மேல் + ஆளர் = மேலாளர் கண்காணிப்பு + ஆளர் = கண்காணிப்பாளர் தயாரிப்பு + ஆளர் = தயாரிப்பாளர் ஆளி நெசவு + ஆளி= நெசவாளி முதல் + ஆளி = முதலாளி தொழில் + ஆளி= தொழிலாளி பயன் + ஆளி = பயனாளி கூட்டு + ஆளி= கூட்டாளி XI Std Tamil .
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் வினையடியுடன் ‘மானம்‘ என்னும் விகுதி சேர்ந்து புதிய சொற்கள் உருவாகின்றன. வினை விகுதி ஆக்கப்பெயர் அடை + மானம் = அடைமானம் கட்டு + மானம் = கட்டுமானம் தேய் + மானம் = தேய்மானம் . பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள் பெயருடன் சேர்ந்து வரும் விகுதிகள். பெயர் விகுதி ஆக்கப்பெயர் அச்சு அகம் அச்சகம் வினையுடன் சேர்ந்து வரும் விகுதிகள் வினை விகுதி ஆக்கப்பெயர் பயில் அகம் பயிலகம் இவ்வாறு, தமிழில் எண்ணற்ற ஆக்கப் பெயர்ச்சொற்கள் விரவிக் கிடக்கின்றன.
இவ்வகையான சொற்கள் நம் மொழிக்குப் புதிய புதிய சொற்களை உருவாக்குவதோடு நில்லாமல், மொழி காலந்தோறும் வளர்வதற்கும் துணைநிற்கின்றன. அறிக : இன்று வழக்கிலுள்ள ஆக்கப்பெயர்களைப் பட்டியலிடுக. அவை எவ்வெவ்விகுதி கொண்டு ஆக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்க. இலக்கணத் தேர்ச்சி க>ொள் பயிற்சி கீழ்க்காணும்