📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 175question

ஆஸ்கர் தமிழர்

Chapter 2: Front Matter · Tamil

ஆஸ்கர் தமிழர் அமெரிக்காவின் கோடாக் அரங்கில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கும் தருணம். இன்னும் சில நிமிடங்களில் இசைக்கான விருதுக்குரியவர் அறிவிக்கப்பட இருக்கிறார். அவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து இசையமைப்பாளர்களும் தம்முள் விருதுக்குரியவர் யார்? என அறியும் ஆவலில் அமர்ந்திருக்கின்றனர்.

அவர்களில் நால்வர் அவ்விருதுக்குப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டவர்கள்; ஒருவர் மட்டுமே புதியவர். அவருக்கே 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது என்று அறிவிக்கப்பட்டது. தேவாரத்தில் பண்களில் பாடல்கள் உள்ளன. தேவாரத்தில் இல்லாது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள்: நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம் ஆகியவை.

சாளரபாணி என்ற பண் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படுகிறது. பரிபாடலில் நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படுகின்றன. சைவத்திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் நட்டபாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார். XI Std Tamil அரங்கத்தின் கரவொலி அடங்குவதற்கு முன்பே சிறந்த திரையிசைப் பாடலுக்கான விருதுக்கும் இவரின் பெயரே அறிவிக்கப்படுகிறது.

இரண்டு ஆஸ்கர் விருதுகள் ஒருவருக்கே! இரு கரங்களிலும் விருதுகளை ஏந்தியவாறு உரையைத் தEொடங்கியவர், தம் தாய்மொழியான தமிழில் உரையை நிறைவு செய்கிறார். ஆம்! அவர்தான், உலக அரங்கில் சாதனை நாயகனாய்த் திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.

இரகுமான். தம் இசைக்குக் கிடைத்த இரு விருதுகளையும் கையில் ஏந்திய நிலையில், கடந்து வந்த பாதை அவர் கண்முன்னே நிழலாடியது. இவருடைய தந்தை ஆர். கே.

சேகர் மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய இசைக்கலைஞர். இளம்வ யதிலேயே ஏ. ஆர். இரகுமான் தம் தந்தையின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டார்.

தந்தையைச் சூழ்ந்திருந்த இசைக்கருவிகள் அவருள் இசை வேட்கையைத் தூண்டின. இசைக்கலைஞர்கள் வியக்கும் வகையில் நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்து குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் சூழல் ஏற்பட்டதனால் பள்ளிப்படிப்புக்கு இடையூறு ஏற்பட்டது. இசைக்குழுக்களில் இரவெல்லாம் பணியாற்றிவிட்டு நேராகப் பள்ளிக்குச் செல்வார்.

பள்ளியின் நுழைவுவாயிலில் இவரின் தாயார் காத்திருந்து இவருக்குச் சீருடை அணிவித்தும் உணவளித்தும் வகுப்பிற்கு அனுப்பி வைப்பார். இத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தால் பள்ளிப்படிப்பு பதினோராம் வகுப்புடனே முடிந்துவிட்டது. ஏ. ஆர்.

இரகுமான், 1992ஆம் ஆண்டு ரோஜா என்னும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகத் தமது திரையிசைப் பயணத்தைத் தE டங்கினார். இவரின் இசை, தமிழ்த்திரைப்பட இசையுலகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற சிறப்பினைப் பெற்றார். தம் இசைப்பங்களிப்பால் இளைஞர் உலகின் இசை ஆளுமையாக வளர்ந்தார்.

அடுத்தடுத்த படங்களில் அவர் வெளிப்படுத்திய மெல்லிசை, கேட்டவர் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. தமிழ் யாப்பிலக்கணத்தின் நால்வகைப் பாக்களில் கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசையாகும். இந்தத் துள்ளலோசைக்கு மயங்காதவர்களே உலகில் இல்லை எனலாம். தEோற்கருவியால் துடித்தெழும் இந்தத் துள்ளல் ஓசை, கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு.

தமிழ் மக்களின் நெடிய வாழ்வியல் மரபில், துள்ளல் ஓசைச் சாயல் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். இதனை நுட்பமாக உணர்ந்த ஏ.ஆர். இரகுமான் தம் இசைக் கட்டத்துக்குள் நின்று இளைஞர்களை ஆடவும் பாடவும் வைத்தார். உலகை வெற்றிகொள்ளப் புறப்பட்ட தமிழர்களுடன் வலம்வந்த இசைத்தோழமை ஏ.ஆர்.

இரகுமான். தEொண்ணூறுகளில் தEொழில்நுட்பக்கல்வி பயின்று உலகெங்கும் பரவிய தமிழ் இளைஞர்களை இணைத்தது அவர்தம் இசை. அவர், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இசை, பண்பாட்டுக் பிங்கல நிகண்டு என்னும் நூலில் பண்கள் காணப்படுகின்றன. பண்கள்,

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →