📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 173poem

இசைத்தமிழர் இருவர்

Chapter 2: Front Matter · Tamil

இசைத்தமிழர் இருவர் XI Std Tamil 1970களின் தEொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களைச் சுமந்து திரிந்த தமிழ்ச்செவிகள் விடுதலை பெற்று, தமிழ்ப்பாடல்களை நோக்கித் திரும்பியதற்கு இளையராஜாவே காரணமெனலாம். எழுபது, எண்பதுகளில் மெல்லத் தEோன்றிப் புது வேகம்கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. பின்னணி இசையிலும் பாடல் இசையிலும் விடுபட்டுப்போன வாய்மொழித் தன்மை, யதார்த்தம் ஆகியன பொதிந்த அவருடைய இசை, சாமானியரையும் ஈர்த்தது; அவர்களது வாழ்வின் தருணங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதEோடு அமைப்புக்கு அப்பாற்பட்ட இசை இயக்கமாகவும் மாறியது. அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கைப் புரிந்துகொண்டு திரைப்பாடல்களைச் செவியுணர் கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர். அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது. இன்றளவும் நெடுந்தொலைவுப் பயணங்களின் வழித்துணையாக அவரின் இசை இருப்பதற்கு இதுவுமொரு காரணம். வற்றாத நதிகள் பாயும் மலைகள் நிறைந்த ஜம்மு, காஷ்மீரின் பஹார் இன மக்களின் நாட்டுப்புற இசையில் புல்லாங்குழலில் வழிந்தோடும் பஹாடி முதல் மதுரை மக்களின் கிராமிய இசையிலிருந்து முகிழ்த்துச் செவ்வியல் இசையில் கோலோச்சும் ஆனந்தபைரவி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே) வரை அவரின் இசையில் பண்கள் இழையோடுகின்றன. எம்மொழியில் இசையமைத்தாலும், அவர் அம்மண் மணத்துடன் தம்மை இணைத்து இசையமைப்பதே, மக்கள் அவருடைய இசையில் ஒன்றுவதற்குக் காரணமாகும். இந்திய இசைமேதைகள் அனைவராலும் மதிக்கப்படுபவர் இளையராஜா. அவரின், ‘ எப்படிப் பெயரிடுவேன்? ’ ( H O W T O NAME IT?) என்னும் இசைத்தொகுப்பும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் செளராஸியாவுடன் இணைந்து வெளியிட்ட ‘காற்றைத் தவிர ஏதுமில்லை’ (NOTHING BUT WIND) என்னும் இசைத்தொகுப்பும் இசையுலகின் புதிய முயற்சிகள் எனக் கொண்டாடப்பட்டன. மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை “ இந்தியா மணிநேரம் (INDIA HOURS)” என்னும் ஆவணக் குறும்படத்தின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ஆரட்டோ ரியோ ( O r - a t o r i o ) என்னும் இசை வடிவில் இசையமைத்துள்ளார். ’ இராஜாவின் ரமணமாலை’, ’இளையராஜாவின் கீதாஞ்சலி’ என்னும் தமிழ் இசைத்தொகுப்புகளையும் கன்னட மொழியில் ’மூகாம்பிகை’ என்ற பக்தி இசைத் தEொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஆதிசங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோ த்திரம் என்ற பக்திப்பாடலுக்கும் இசையமைத்துள்ளார். பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் அவர் உருவாக்கியதாகும். இளையராஜாவின் இசை நுணுக்கம் தமிழகத்தின் நாட்டுப்புற இசை வடிவத்தைத் திரையிசையில் தவழவிட்டவராகவே இசைஞானி இளையராஜா அறியப்படுகிறார். ஆனால், மேற்கத்திய இசையை முறைப்படி பயின்ற காரணத்தால் நாட்டுப்புற இசையின் பெற்ற விருதுகள் சில: இந்திய அரசு - பத்ம விபூஷண் விருது சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது தமிழ்நாடு – கலைமாமணி விருது மத்தியப்பிரதேசம் – லதா மங்கேஷ்கர் விருது கேரளம் - நிஷாகந்தி சங்கீத விருது XI Std Tamil செவ்வியல் தன்மைகளோடு மேற்கத்திய இசையைக் கலந்து உலவவிட்டார். கவிஞர், மனத்தில் உருவகித்துக் காகிதத்தில் எழுதுவதுபோல், மனத்தின் இசையைக் குறியீடுகளாகக் காகிதத்தில் எழுதிவிடுவார்! இசைஞானி தன் தேடலின் மூலம் மேற்கத்திய இசையுடன் கர்நாடக, இந்துஸ்தானி இராகங்களையும் திரையிசையில் பயன்படுத்தியிருக்கிறார். நாட்டுப்புறப் பாடலுக்குக் கர்நாடக இசை வடிவமும் கல்யாணி இராகத்தின் ஆரோகண சுரங்களைக்கொண்டே (ஏறுவரிசைச் சுரங்கள்) ‘கலைவாணியே உனைத்தானே’ என்னும் பாடலுக்கு மெட்டமைத்திருக்கிறார். மூன்றே மூன்று சுரங்களைக்கொண்டு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசையமைத்தும் இருக்கிறார்; நான்கே இசைக்கருவிகளைக கொண்டு ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் (நூறாவது நாள்). பிற நாட்டின் இசைவடிவத்தை நம் மண்ணுக்கேற்ற வகையில் மாற்றம் செய்வதEோடு திரைப்படப் பின்னணி இசைக் கோவையைக்கூட உணர்வின் மொழியாக மாற்றித் தருவதே அவருடைய தனிச்சிறப்பாகும். தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என நம் நாட்டின் பிற மொழிப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார். இளையராஜா இசைக்கலைஞர் மட்டுமல்லர்; சிறந்த ஒளிப்படக் கலைஞர்; கவிஞர்; பாடகர்; ‘பால்நிலாப் பாதை’ , ‘வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார். மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான “ நம்ரதா கே சாகர் ” என்னும் பாடலுக்கு இசையமைத்து, இந்துஸ்தானி இசைப் பாடகர் அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவை த்து இசைக் கோவையை வெளியிட்டிருக்கிறார். ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனி (Symphony) என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் இவரே. சிம்பொனி இசைப் பணியை எழுதக் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும்; வெறும் பதின்மூன்று நாள்களில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பண்டைய தமிழரசர்களின் ஆட்சி வட இந்தியா வரையிலும் பரவியிருந்தது. ஆனால், இளையராஜாவின் இசை ராஜாங்கமோ உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →