📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 175question

ஆஸ்கர் தமிழர் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

பாடும் காலங்களுக்கு ஏற்றவாறு பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என்று வகுக்கப்பட்டுள்ளன. XI Std Tamil குறியீடுகளைத் தம் இசையில் தவழவிட்டார். இணைய வழியில் உலவும் இளைஞர்களின் கனவை, இசையாக மொழிபெயர்த்துக் காலப் பதாகையில் ஒலிவண்ணம் தீட்டினார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இவற்றுடன் மேற்கத்திய, உலகளாவிய இசை முறைகளையும் கலந்து, புதிய கணினித் தEொழில்நுட்ப உதவியுடன் உலகத்தரத்தில் இசையமைத்ததுடன் பல இளம் பாடகர்களையும் அறிமுகம் செய்தார்.

இரகுமானிடம் எல்லோரும் இரசித்துக் கேட்பது அவரின் ’தாளம் உருவாக்கும் முறை’ . ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்குமுன் அதற்கான தாளத்தைத்தான் முதலில் உருவாக்குவார். பாடலுக்கான சூழலை மனத்தில் உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ற தாளக்கட்டை உருவாக்கி அதனுள் அமிழ்ந்திருக்கும் பாடலுக்கான மெட்டை வெளிக்கொணர்வார். ஒரு சிறந்த மெட்டு எப்படி ஈர்க்கிறதEோ, அதுபோலப் பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையும் மக்களை ஈர்க்கும்படியாக இசையமைப்பதில் வல்லவர்.

மெட்டுக்கு இணையான இசைக்கோவையை வழங்கியதில் தனித்துவமானவர் இளையராஜா எனில், அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இரகுமான் ஆவார். இவர் இசையமைத்த “வந்தே மாதரம்”, “ஜன கண மன” என்னும் இசைத்தொகுதிகள், நவீன இசை வடிவில் நாட்டுப்பற்று உணர்வை மிளிரச் செய்தன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இசையமைத்ததEோடு இந்தித் திரைப்பட உலகத்திலும் தம் இசை முத்திரையைப் பதித்தார். மேலைநாட்டுத் திரைப்படங்களுக்கும், நாடகங்களுக்கும் இசையமைத்து உலக இசையமைப்பாளர்கள் வரிசையிலும் தம்மை நிலைநாட்டிக்கொண்டார்.

வெவ்வேறு கலாச்சார மக்களையும் தம் இசையால் ஒருங்கிணைத்ததுடன் திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்படுத்திய சிறப்பும் இவருக்குண்டு. “ ஸ்லம்டா க் மில்லியனர் ” என்ற திரைப்படத்தின் இசைக்காக, ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றதன் மூலம் உலகளாவிய புகழ் பெற்றார். அவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. இவரின் ஆஸ்கர் சாதனை, சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கைப் பாடமாகும்; அதே படத்தின் இசைக்காக கிராமி விருதையும் பெற்றார்.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இன்றிமையாத இடமுண்டு. அதில், இளையராஜா, ஏ.ஆர். இரகுமான் ஆகியோரின் வருகை புகழ் மகுடமாக ஒளிர்கின்றது. கற்பவை கற்றபின்...

பெற்ற விருதுகள் சில: இந்திய அரசு - பத்ம பூஷண் விருது தமிழ்நாடு - கலைமாமணி விருது கேரளம் - தங்கப் பதக்கம் உத்திரப்பிரதேசம் - ”ஆவாத் சம்மான்” விருது மத்தியப்பிரதேசம் - “லதா மங்கேஷ்கர்” விருது மொரீஷியஸ் - தேசிய இசை விருது மலேசியா – தேசிய இசை விருது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் - சர்வதேச இசை விருது தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண், தமிழில் பிறந்தநாள் பாடல் – போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து இசையுடன் பாடிப் பயிற்சி பெறுக. XI Std Tamil ( பள்ளியின் இணைய இதழுக்காக அகராதியியலர் செழியன் அவர்களுடன் மாணவர்கள் முத்து, தமிழ்க்கனல் நேர்காணல்) முத்து : வணக்கம் ஐயா ! செழியன் : வணக்கம். முத்து : தங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

செழியன் : மகிழ்ச்சி. தமிழ்க்கனல்: இப்பொழுதுள்ள பேச்சு வழக்கில் ஆங்கிலச்சொற்கள் மிகுதியாகக் கலந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்குரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்து வருகிறது. இதற்கான காரணத்தைச் சொல்லுங்கள் ஐயா.

செழியன் : அப்படி முழுமையாய்ச் சொல்லிவிடமுடியாது. சான்றாக cellphone என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கைபேசி, செல்லிடப்பேசி, அலைபேசி போன்ற சொற்கள்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →