படைப்பாக்க உத்திகள் XI Std Tamil வினை உவமை அவர்கள் மூளையில் விதையை ப் போல் தூவப்பட வேண்டிய அறிவு ஆணியைப்போல் அறையப்படுகின்றது. பயன் உவமை வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ! மெய் உவமை ( வடிவம்) சுருக்கிய குடையைப் போலத் தோன்றும் அச@ோகமரம். உரு உவமை ( நிறம் ) ச@ோடிய விளக்காய் மாலைநேரச் சூரியனின் மஞ்சள் வெளிச்சம் தெருவில் நிரம்பி வழிந்தது.
ஆகிய கவிதைகளில் உவமை தோன்றும் கள ங்கள் வெளிப்பட்டுள்ளன. உருவகம் ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்பொழுது அது உருவகம் எனப்படுகிறது. உவம உருபுகள விரித்துச் சொல்வதைவிடத் தொகுத்தும் சுருக்கியும் சொல்லுவதில் ஆற்றலும் அழகும் இனிமையும் இருப்பது தெரிந்திருக்கும். அந்தவகையில் உவமை, உவமைத்தொகைய கி உருவகமாக ஆயிற்று.
உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது ‘ உருவகம்’ ஆகும். உருவகத தொடரில் உவமேயம் ( உவமிக்கப்படும் பொ ருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும். உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம் . தாமரை போலும் முகம் என்ற உவமை செறிவூட்டப்பட்டு முகத்தாமரை என உருவகத்தை உருவாக்குகிறது.
உவமையை விட உருவகம் ஆழமானது. உவமை அணியில் உவமானமும் உவமேயமும் வேறுவேறானவை என்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கும். உருவகத்தில் இரண்டும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது. தீ போல் சினம் என்பதைச் சினத்தீ என்பார் பாரதியார்.
பாடல் முழுவதும் உருவகமாக அமைவதும் உண்டு. சுட்டும் விழிச்சுடர்தான் – கண்ணம்மா சூரிய சந்திரரோ ? வட்டக் கரியவிழி – கண்ணம்மா வானக் கருமை கொல்லோ ? பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் – தெரியும் நட்சத்திரங்களடி...
- பாரதி (கண்ணம்மா என் காதலி) என்னும் கவிதையில்தான் எத்தனை உருவகங்கள். பாஞ்சாலி சபதத்தில் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கதிரவன் ஒளிபட்டு விதவிதமான மாயம் கொள்ளும் மேகங்களுக்குக் கூறுகின்ற உருவகங்கள் உள்ளம் கவர்ந்தவை. தீயின் குழம்புகள், செழும்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள், தங்கத்தீவுகள், நீலப்பொ ய்கைகள், தங்கத் தோணிகள், கருஞ்சிகரங்கள், தங்கத் திமிங்கலங்கள் என்றெல்லாம் உருவகிப்பது அழகூட்டுகிறது. உருவகத்திலும் வினை உருவகம், பயன் உருவகம், வடிவ (மெய்) உருவகம், உரு (நிறம்) உருவகம் என்ற பகுப்பு உண்டு.
எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி… (சிந்தனை) - வினை ஆவேசப் புயல்கள லும் அசைக்க முடியாத ஆகாசப் பூ… (கதிரவன்) - பயன் XI Std Tamil நீலவயலின் நட்சத்திர மணிகள்… (வானமும் விண்மீன்களும்) - மெய் மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்… (அருவி) - நிறம் உள்ளுறை உவமம் கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகள க் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமம் (உவமை) என்பர். உள்ளுறை உவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி. அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக்கொ ள்ளும் வடிவமாகவும் இதைக் கருதுகின்றனர். இலக்கியங்களில் காணப்படும் கருப்பொ ருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகள க மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் உள்ளுறை அமையும்.
ஓவியம், சிற்பம் முதலிய நுண்கலைகளிலும் குறிப்புப் பொருள்கள் உண்டு. ஆனால், அவை எல்லாருக்கும் எல்லாக் காலத்திலும் விளங்கும் என்று கூறமுடியாது. கவிதைகளில் உள்ள குறிப்புப்பொருள் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது. எனவே கருப்பொ ருள் கொ ண்டு விளக்கப்படும் குறிப்புப் பொருளாகிய உள்ளுறை உவமம் தமிழிலக்கியத்தின் நேரிய, இனிய, நாகரிக வழியாகும்.
தோழிக்குச் சொல்வதுபோல் தலைவி, மறைந்து நிற்கும் தலைவனுக்குச் சொல்வதாகப் பெருங்குன்றூர் கிழார் பாடிய பாடல் ஒன்றில் உள்ளுறை உவமம் அமைந்துள்ளதைக் காண்போம். “ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பானாட் கங்குல்” - அகம். தலைவன் பிறர் அறியாமல் தலைவியைச் சந்திக்க இரவு நேரத்தில் வருகிறான். அவ்வேளையில் பசியுடன் அலையும் கரடியொன்று ஈசல்கள் நிறைந்த புற்றில் கைய விட்டுப் பார்க்கிறது.
அந்த ஈசல் புற்றில் சுருண்டு படுத்திருந்த பாம்பினைக் கரடி அறியவில்லை. கரடியின் நகங்கள் பட்டு, பாம்பு வலியால் துடிக்கிறது. இங்குக் கரடியின் செயலும் பாம்பின் துன்பமும் காட்டப்படுகின்றன. ஆனால், உள்ளே உறைந்திருக்கும் செய்தி வேறு .
இரவு நேரத்தில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலால் தலைவி அஞ்சி வருந்துவதை இப்பாடல் தெரிவிக்கிறது. கரடி தலைவனுக்கும் பாம்பு தலைவிக்கும் குறியீடுகள ய் அமைந்து உள்ளுறை உவமம் உருவாகிறது. மேலும் இப்பாடலில் உள்ளுறை உவமத்துடன் இறைச்சிப் பொ ருளும் அமைந்துள்ளது. உள்ளுறை வினை, பயன் பHோன்ற அடிப்படைகளில் தோன்றும்.
குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும். XI Std Tamil