- ’பாரதியைப் பற்றி நண்பர்கள்’, ரா. அ. பத்மநாபன். பாரதி பணிபுரிந்த இதழ்களின் அட்டைப் படங்களையும் கருத்துப்படங்களையும் இணையத்தில் சேகரித்துப் படத் தொகுப்பு செய்யவும்.
XI Std Tamil உவமை ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நம்மிடம் இயல்பாக அமைந்துள்ள பண்பாகும். தெரிந்தவற்றைக் கொண்டு தெரியாதவற்றை அறிந்துகொண்டு மனித அறிவு வளர்ந்து வந்திருக்கிறது. மொழி தோன்றிய அன்றே உவமையும் தோன்றியிருக்க வேண்டும். கருத்தைச் சொல்கையில் கேட்போர் மனத்தை ஈர்க்கும் வகையிலும் சொல்வதை எளிதில் உணரும் வகையிலும் கூற உவமைகள ( ஒப்பீடுகள ) ப் பய ன்படுத்தினர்.
உவமை வினை( தொழில்) , பயன், வடிவம்(மெய்), உரு(நிறம்)என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்பார் தொல்காப்பியர். வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் (தொல்காப்பியம் - ) புலி போலப் பாய்ந்தான் - வினை (தொழில்) மழை போலக் கொடுக்கும் கை - பயன் துடி போலும் இடை - வடிவம் ( மெய் ) தளிர் போலும் மேனி - உரு (நிறம் ) கண்ணன் புலிபோ லப் பாய்ந்தான் என்பதில் கண்ணன் - உவமேயம் (பொருள்), புலி – உவமானம் (உவமை), போ ல - உவம உருபு, பாய்தல் - பொதுத்தன்மை. இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன. ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் உவமையே எளியதும் தொன்மை மிக்கதாகவும் உள்ளது.
சங்கப்பாடல்களில் பெரும்பாலும் உவமை அணியே இடம்பெற்றுள்ளது. பிற அணிகள் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் பாடல் ஆசிரியர்களின் பெயர் தெரியாதபோ து அப்பாடலில் உள்ள உவமையைக் கொண்டே பெயர் சூட்டினர். செம்புலப்பெயல்நீரார், தேய்புரிபழங்கயிற்றினார், அணிலாடு முன்றிலார் என்பவை அப்படிப்பட்ட பெய ர்கள்.
“ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே மற்றதன் துன்னரும் கடாஅம் போல இன்னாய் பெரும!நின் ஒன்னா தோர்க்கே” (புறம்- ) ஔவையார் அதியமானின் வெற்றிப் புகழை யும் வீரச் சிறப்பையும் மிகச் சுருங்கிய அடிகளில் அழகாகப் புனைகிறார். குளத்தில் ஊர்ச்சிறு பிள்ளைகள் யானைமீது நீரை இறைத்தும் வெண்கொ ம்புகள த் கழுவியும் விளையாடுவர். அவ் யானைக்கு மதம் பிடித்துவிட்டால் யாரும் பக்க த்தில் அணுக முடியாது. அதியமானும் அப்படிப்பட்டவன்தான்.
பரிசிலர்க்கு இனியன். பகைவர்க்கு இன்னாதவன். யானை பற்றிய உவமை இப்பாடலுக்கு உயிரூட்டுகிறது. கண்ணீரை நீ துடைத்த போது நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட வானம் போல் உன் முகம் இருண்டு போயிருந்தது....
.. என்னும் புதுக்கவிதை அடிகளிலும் உவமை அமைந்துள்ளதைக் காணலாம்.