📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 199question

பதிற்றுப்பத்து

Chapter 2: Front Matter · Tamil

பதிற்றுப்பத்து XI Std Tamil திணை : பாடாண்திணை பாடாண் திணையானது ஒரு மன்னனின் புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறுவதாகும். பாடப்படும் ஆண்மகனின் உயர்பண்புகளைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும். துறை: செந்துறைப் பாடாண்பாட்டு செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்.

வண்ணம் : ஒழுகு வண்ணம் வண்ணம் என்பது ஒலிநய (சந்தம்) வேறுபாடு ஆகும். வண்ணந் தாமே நாலைந் தென்ப. தொல். பொ.

ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதாகும். ஒழுகு வண்ண மோசையி னொழுகும். தொல். பொ.

தூக்கு: செந்தூக்கு தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும். செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும். வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே. தொல் .

பொ. பா வகை : நேரிசை ஆசிரியப்பா சொல்லும் பொருளும் பதி - நாடு; பிழைப்பு - வாழ்தல்; நிரையம் - நரகம்; ஒரீஇய - நோய் நீங்கிய; புரையோர் - சான்றோர்; யாணர் – புது வருவாய்; மருண்டெனன் - வியப்படைந்தேன்; மன்னுயிர் -நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி; தண்டா - ஓயாத; கடுந்துப்பு - மிகுவலிமை; ஏமம் - பாதுகாப்பு; ஒடியா - குறையா; நயந்து – விரும்பிய. முதல் அடிகளின் கருத்துச் சுருக்கம்: (சேரலாதனே! பகை நாட்டில் ஓராண்டுவரை தங்கிப் போர் செய்வாய்.

பகைவர்க்கு நரகத் துன்பத்தைத் தரும் உன் வீரர்கள் உன்னுடனே வெள்ளமென வருவர். பகை நாட்டில் நீ மூட்டிய தீயால் அந்நாட்டின் பழை ய அழகு அழிந்தது. காய்ந்த வயல்களில் வீரர்கள் தங்கினர். இத்துன்பத்தை மறந்து உன்னை எதிர்த்து அழிந்த பகை வர் நாடுகளைக் கண்டு வந்தேன்.

பல வளங்களை உடைய உன் நாட்டில் தொடர்ச்சியான விழாக்களைக் கொண்டாடும் பழமையான ஊரில் உன் வெற்றி முரசு கொட்டுகிறது. நெடுஞ்சேரலாதனே! கலைஞர்கள் உன்னை வாழ்த்தி இசைக்கின்றனர்.) பாடலின் பொருள் “ சேரலாதனே, உன் குடிமக்கள் எப்பொ ழுதும் நல்ல செயல்களையே செய்து வருபவர்கள் பசி, பிணி அறியாத அவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயராமல் உன் நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால் நீ உறுபசி ஓவாப்பிணி செறுபகை இன்மையால் புலம்பெயர்ந்து செல்லாது வாழும் மக்கள்!

சான்றோர் புகழும் ஆட்சிச் சிறப்பில் துயரம் தEொலைந்த புதுவள நன்னாடு! மண்ணுலக உயிர்கள் மாண்புடன் வாழ ஈகையால் நீளும்கை! எதிரிகளை அழிக்கும்கை! இடையறாது இடையறாது பெரும்பொருள்கொடுத்துப் பாதுகாப்பு அளிக்கும் பெருவிழாத் தலைவன் என நற்புகழ் குறையாத வலிமைமிகு உந்தன் பண்புபல நினைந்தும் கண்டும் பெருவியப்பு அடைந்தேன்; மதிமிரண்டு போனேன்!

XI Std Tamil போற்றப படுகிறாய். இப்பெரிய நிலவுலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும் பண்புடையவனே, நீ சான்றோர்களுக்கு அரிய பொருள்கள் நல்குவாய். எப்பொழுதும் விழாக்கள் நிகழும் நாட்டிற்கு நீ உரிமை உடையவன். நெடியோன் போன்ற புகழினை உடைய உன் நாட்டின் வளத்தையும் பகை நாட்டின் அழிவையும் கண்டு வியப்படைகிறேன்.” சேரநாடு செல்வவளம் மிக்கது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் நாட்டையும் மக்களையும் கண்ணெனக் காத்தான். ஆகவேதான், அவன் நாட்டு மக்கள் வேற்று நாட்டுக்குச் செல்ல விரும்புவதில்லை. புது வருவாய்ப் பெருக்கமும் ஈத்துவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன். இலக்கணக் குறிப்பு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →