📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 199question

பதிற்றுப்பத்து · Part 2

Chapter 2: Front Matter · Tamil

துய்த்தல் – தொ ழிற்பெயர்; ஒரீஇய – சொல்லிசை அளபெடை; புகழ்பண்பு - வினைத்தொகை; நன்னாடு – பண்புத்தொகை; மருண்டனென் – தன்மை ஒருமை வினைமுற்று; ஒடியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பகுபத உறுப்பிலக்கணம் மருண்டனென் – மருள்(ண்) + ட் + அன் + என் மருள் – பகுதி, ‘ள்’ ‘ண்’ ஆனது விகாரம் ட் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை என் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி. துய்த்தல் – துய் + த் + தல் துய் – பகுதி, த் – சந்தி, தல் – தொழிற்பெயர் விகுதி புணர்ச்சி விதி மண்ணுடை – மண் + உடை தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் – மண்ண் + உடை உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – மண்ணுடை புறந்தருதல் – புறம் + தருதல் மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் – புறந்தருதல். கற்பவை கற்றபின்...

நூல்வெளி எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளை எடுத்தியம்பும் இது, பாடாண் திணையில் அமைந்துள்ளது. முதல் பத்துப் பாடல்களும் இறுதிப் பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம்பெற்றிருக்கின்றன; பாடலில் வரும் சிறந்த சொற்றொடர் அப்பாடலுக்குத் தலை ப்பாகத் தரப்பட்டிருக்கிறது.

பாடப்பகுதிப் பாடலுக்குச் சேரலாதனின் படைவீரர் பகைவர்முன் நிரையபாலரைப் போலப் (நரகத்து வீரர்கள்) படைவெள்ளமாக நின்றதால் ‘நிரைய வெள்ளம்’ என்று தலைப்பு இடப்பட்டுள்ளது. பாடப்பகுதியான இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவ ன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் . இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் , உம்பற்காட்டில் ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார். பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து ( ) என்ற குறள்வ ழி நாட்டிற்கு அழகு சேர்ப்பன குறித்துக் கலந்துரையாடுக.

XI Std Tamil நடுவரின் முன்னுரை பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர் அவர்களே! என் இனிய நண்பர்களே! வணக்கம். இளமை என்றாலே அறிவு, துணிவு ஆகிய இரண்டின் கலவை எனலாம் அறிவூக்கத்திற்கும் படை ப்பூக்கத்திற்கும் அடித்தளமிடப்படும் பருவம் இது.

இந்தச் சிந்தனைப் பட்டிமன்றத்திற்கு இளைஞர்களை முதன்மைப்படுத்திய தலைப்பு ஏன் வழங்கப்பட்டது என்று பல ரும் எண்ணலாம். இந்திய மக்கள் தொகையில் இன்று சரிபாதி இளைஞர்கள் அல்லவா! நம்முடைய பங்களிப்பு இன்றி வீடோ, நாடோ எந்தவித வளர்ச்சியையும் அடைந்துவிடமுடியாது. தமிழர் சிந்தனைக்கான வெளிப்பாட்டு வடிவங்களில் சிறப்பானதொரு வடிவம் பட்டிமன்றமாகும்.

முரண்பாடான பல கருத்துகளை விளக்கவும் நிலைநாட்டவும் பட்டிமன்றம் உதவுகின்றது. பண்பட்ட முறையில் கருத்துகளை முன்வைத்துப் பேசுகையில் சிந்தனையாற்றலையும் பேச்சுத்திறனை யும் மொழியாளுமையையும் வளர்த்தெடுக்கிறது. எனவேதான், தலைப்பு இளைஞர்களை மையப்புள்ளியாக வைத்துச் சுழல்கிறது. (கரவொலி….) ஆண் மாணவர்கள் மட்டும் ஏன் கைதட்டுகிறார்கள்?

எனக்குப் புரிந்துவிட்டது. இன்றைய தமிழ்ச் சமுதாயம் ‘இளைஞர்’ என்ற சொல்லிற்கு ‘இளவயது ஆண்கள்’ என்றே பொருள் கொண்டு பழகிவிட்டது. இளைஞர் என்ற சொல் இருபாலரையும் குறிக்கின்ற பொதுச்சொல் என்றே புரிந்துகொள்வோம். கவிஞர் தாராபாரதி எழுச்சியுடன், “வீட்டுக்கு உயிர் வேலி!

வீதிக்கு விளக்குத்தூண்! நாட்டுக்குக் கோட்டை மதில்! நடமாடும் கொடிமரம் நீ”

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →