📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 84question

பகுபத உறுப்புகள் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

பெரும்பாலும் த் , ப் , க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும். உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு. அசைத்தான் - அசை + த் + த் + ஆன் படிக்கிறார் - படி + க் + கிறு + ஆர் காப்பார் - கா + ப் + ப் + ஆர் வணங்கிய - வணங்கு + இ(ன்) + ய் + அ பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும். சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப்பேறு எனக் குறிப்பிடல் வேண்டும்.

விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே எழுத்துப்பேறு ஆகும். எழுத்துப்பேறு காலம் காட்டாது . பாடுதி - பாடு + த் + இ மொழியாதான் - மொழி + ய் + ஆ + த் + ஆன் இச்சொற்களில் ‘இ’ என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிக்கு முன்னும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும் ‘த்’ என்பது எழுத்துப்பேறாகும். சாரியை பகுதியJோடு இடைநிலையும் இடைநிலையJோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு, சாரியை ஆகும்.

பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். பார்த்தனன் - பார் + த் + த் + அன் + அன் இச்சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் ‘அன்’ என்பதே சாரியையாகும். சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று குறிப்பிடல் வேண்டும். தருகுவென் - தா(தரு) + கு + வ் + என் இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் ‘கு’ என்பதே சாரியையாகும்.

சாரியைக்குப் பொருள் இல்லை. அன் என்பது விகுதியாக வரும்போது அன் என்பதே சாரியையாக வரும். ஆன், ஆள், ஆர் ஆகிய விகுதிகள் வரும்போது அன் சாரியையாக வராது. விகாரம் பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.

XI Std Tamil  ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும். இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும். நின்றான் - நில்(ன்) + ற் + ஆன் - ‘நில்’ என்னும் பகுதியில், ‘ல்’ ‘ ன்’ ஆகத் திரிந்தது. வணங்கிய - வணங்கு + இ (ன்) + ய் + அ - இ(ன்) என்னும் இடைநிலையில் னகரம் கெட்டது.

கண்டான் - காண் ( கண் ) + ட் + ஆன் - காண் என்னும் பகுதி கண் எனக் குறுகியது. எழுதினோர் - எழுது + இன் + ஓர்(ஆர்) - ஆர் என்னும் விகுதி ஓர் என நின்றது. நினைவில் கொள க. இறந்தகால இடைநிலைகள் த், ட், ற், இன் நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று எதிர்கால இடைநிலைகள் ப், வ் எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல் தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன், அல், அன் கு, டு, து, று தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் எம், ஏம், அம்,

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →