📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 84question

பகுபத உறுப்புகள் · Part 3

Chapter 2: Front Matter · Tamil

ஆம், ஓம், கும், டும், தும், றும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஐ, ஆய், இ முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் இர், ஈர், மின் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் அன், ஆன் படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் அள், ஆள், படர்க்கைப் பல ர்பால் வினைமுற்று விகுதிகள் அர், ஆர், ப, மார், கள் படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள்து, று, டு படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் அ, ஆ வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர் தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் அ, உம் தெரிநிலை வினையெச்ச விகுதிகள் உ, இ, ... தமிழ் ஓர் ஒட்டுநிலை மொழி . ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் இருப்பினும் தமிழில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லாவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்தே சொல்லாகின்றன.

அவ்வாறு சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கு ஒரு மொழியியல் நுட்ப அடிப்படை உள்ளது. பகுதி ஒருமொழியின் அடிப்படையான வேர்ச்சொல்லாகும். புதிய சொல்லாக்கத்திற்கு வேர்ச்சொற்களின் வருகை அவற்றின் சேர்க்கை பற்றிய மொழியியல் நுட்ப அறிவு இன்றியமையாதது. இதன்மூலம் துறைதோறும் புதிய கல ச்சொற்களை உருவாக்க முடியும்.

திணை , பால் , எண் , இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி தமிழ்மொழி. இச்சிறப்புக்குக் காரணம் சொல்லின் விகுதி ஆகும். இவ்வாறு வேறு வேறு உறுப்புகள இணைத்துச் சொற்களை உருவாக்க முடியும். இச்சொற்களை வேண்டும்போது பிரித்துக் கொள்ளல ம்; மறுபடியும் சேர்த்துக் கொள்ளல ம்.

பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாது. பகுபதத் தன்மை உள்ள மொழியைக் கற்றுக் கொள்வ து எளிது. பிற மொழியினர் தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ள இதுவுமொரு காரணம் ஆகும். மேலும், இப்பகுபதத் தன்மையால் எண்ணிறந்த சொற்கள் உருவாகின்றன.

இது மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது ஆகும். XI Std Tamil இலக்கணத் தேர்ச்சி கொள் . பகுபத உறுப்புகள் எத்தனை ? அவை யாவை ?

. காலம்காட்டும் இடைநிலைகள எடுத்துக்காட்டுடன் விளக்குக. . பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும் ?

. விகுதிகள் எவற்றை உணர்த்தும் ? . பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி சந்தி விகாரம் இடைநிலை சாரியை விகுதி அமைந்து பார்த்தான் தோன்றி வருகிறார் செய்க நடந்தனன் கொடுத்த . பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்க. அன் - வந்தனன் இன் - முறிந்தது கு - காண்குவன் அன் - சென்றன . பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன படுத்திச் சொற்களை உருவாக்குக.

கற்பவை கற்றபின்... உரைநடைப் பகுதியில் அமைந்துள்ள எவையேனும் பத்துச் சொற்களுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக. பார் காண் உரை ஆ அல் இல் ஆன் அள் அர் பேசு எழுது வணங்கு இன் கிறு வ் ஆ ஆன் .  வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சொற்களை உருவாக்குக.

XI Std Tamil பலவுள் தெரிக. . கூற்று – “கோடு“ என்பது தமிழ்ச்சொல் ஆகும். விளக்கம் – கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.

அ) கூற்று சரி , விளக்கம் தவறு ஆ) கூற்றும் சரி விளக்கமும் சரி இ) கூற்று தவறு, விளக்கம் சரி ஈ) கூற்றும்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →