📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 69grammar_exercise

பீடு பெற நில்

Chapter 2: Front Matter · Tamil

பீடு பெற நில் XI Std Tamil திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். திராவிடர்களை, ‘மலைநில மனிதர்கள்’ என்று அழைக்கிறார் கமில் சுவலபில் (Kamil Zvelebil). “சேயJோன் மேய மைவரை உலகம்” என்று உரைக்கிறது தொல்காப்பியம். “விண்பொ ரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்கிறது திருமுருகாற்றுப்படை .

மேற்குறிப்பிட்டுள்ள பாடல் அடிகள் தமிழரின் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்தும் பண்டைய பதிவுகள க விளங்குகின்றன. பழ ந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் எழுவருமே மலைப்பகுதிகளின் தலைவர்களாகவே விளங்கியுள்ளனர். பெருநிலப் பகுதிகள ஆண்ட முடிமன்னர்களுக்குக்கூட வழங்காத பெருமையைப் பழ ந்தமிழ் இலக்கியங்கள் இக்குறுநிலத் தலைவர்களுக்கு அளிப்பதைப் பரக்கக் காணலாம். திராவிடர்களின் மலைப்பெருமிதம் இந்தியாவில் தற்போது வாழும் பல்வே று திராவிடப் பழ ங்குடிகளின் இனக்குழுப் பெய ர்கள் அப்பழங்குடியினரின் மலை சார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.

கீழ்க்காணும் இனக்குழுப்பெயர்கள் ‘மலை’ என்ற சொல்லை அடிப்படையாகக்கொண்டு உருவாகியுள்ளன. மால் பஹாடியா ஜார்கண்ட் மல அரயன் மேற்குத்தொடர்ச்சி மலைகள் - கேரளம் மல குறவன் நெடுமங்காடு - கேரளம் மல மூத்தன் எர்நாட் - கேரளம் மல பணிக்கர் வட கேரளம் மலயன் பாலக்காடு - கேரளம் மல வேடா இடுக்கி - கேரளம் மலேரு தட்சிண கன னடா - கர்நாடகம் இதைப் போலவே , கோட்டா நீலகிரி, தமிழ்நாடு கொண்டா தோரா ஆந்திரப்பிரதேசம் கோண்டு, கொய்ட்டெர் ஒடிஸா மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும். தமிழ் அகத்திணையியல், மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று குறிக்கும். குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப் பாடல்கள் மலையோடு இயைந்த தமிழர்தம் சீரிய வாழ்வினைப் பேசின.

மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை OROLOGY என்ற கலைச்சொல்லால் அழைப்பர். தமிழர் வாழ்வில் மலைகள் பெறும் சிறப்புக் குறிப்பிடத்தக்கது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →