இயற்கை வேளாண்மை XI Std Tamil ச@ொக்கலிங்கம்: ஆமாம்மா, பனைமரம் நம்ம தமிழ்நாட்டோட மாநில மரம் . பனங்கொட்டய மூன்றடிக்கு மூன்றடி இடைவெளி விட்டு நட்டு வச்சிருக்கேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகுது! இன்னும் ஏழு ஆண்டுல பலன் தரும். மங்கை: பனைமரத்துனால என்ன பயன் சித்தப்பா? ச@ொக்கலிங்கம்: என்னம்மா, இப்படிக் கேட்டுட்ட, பனைமரம் ஏழைகளோட கற்பக விருட்சம்னு ச@ொல்லலாம்; சிறந்த காற்றுத் தடுப்பானும்கூட. ஆழத்தில் நீர்மட்டம் குறையாம நீரைச் சேமிச்சு வைக்கிற தன்மையுடையது. இதனால நிலத்தடி நீர்மட்டம் குறையாது. பனை வளர, பெரிய அளவுக்குத் தண்ணீர் தேவை யில்லை. இன்னும் ஏழு ஆண்டில் காய்க்கத் தொடங்கிடும். நுங்கு, பதநீர் மட்டுமல்ல அவற்றிலிருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டுன்னு மதிப்புக்கூட்டுப் பொருள்களையும் உருவாக்கலாம். நம்முடைய மருதம் பண்ணையைச் சுற்றிலும் மொத்தமாக பனைமரம் வெச்சிருக்கேன். வாம்மா, உள்ளே போவோம்! மங்கை: சித்தப்பா, நீங்க மதுரையில வேலை பார்த்தப்ப பழைய முறையில்தானே வேளாண்மை நடந்திருக்கும். இன்றைக்கு உரம், பூச்சிக்கொல்லி என்று மண்ணே நஞ்சாகிப் போயிருக்கு. ச@ொக்கலிங்கம்: ஆமா, மங்கை! நிலத்தைச் சரிசெய்வதுதானே முதல் வேலை! அதற்கு முதல்ல அறுவடை முடிந்த பிறகு வைக்கோலைச் சமமாகப் பரப்பி, மடியச் செய்து மறுபருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி உழ வேண்டும். மங்கை: வைக்கோலை மடியச் செய்து உழ வேண்டுமா? மல்லிகா: ஆமாம் மங்கை. இந்த வைக்கோல் மென்மையானதாக வும் லேசானதாக வும் தெரிகிறது. இந்த வைக்கோலின் உண்மையான மதிப்பை மக்கள் அறிந்துகொண்டால் உலகம் ஒருமுறை குலுங்கும். நிலத்தில் வைக்கோலைப் பரப்புவது, உரச்செடிகளை வளர்ப்பது, நிலத்தில் இருந்து கிடைக்கும் குப்பை கூளம், செடி செத்தைகளை நிலத்திற்கே கொடுப்பது என்ற செயல்கள் நெற்பயிரும் மாரிக்காலப் பயிரும் வளர்வதற்கான வளத்தைப் பூமிக்கு அளிக்கின்றன. ச@ொக்கலிங்கம்: பரவாயில்லையே! மல்லிகா. இவ்வளவு தெளிவாக வைக்கோ லின் மகத்துவம் பற்றி அறிந்து வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர் ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா . இவர் 1978ஆம் ஆண்டு, “ஒற்றை வைக்கோல் புரட்சி”
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 40poem
இயற்கை வேளாண்மை
Chapter 2: Front Matter · Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →