புணர்ச்சி விதிகள் XI Std Tamil மாசற்றார் - மாசு + அற்றார் மாசு(ச்+உ) + அற்றார் - ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதிப்படி ‘உ’ மறைந்தது. மாச் + அற்றார் - ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி ‘மாசற்றார்‘ எனப் புணர்ந்தது. ii) ட், ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்துவரும் நெடில்தொடர் , உயிர்த்தொட ர்க் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்துப் புணரும். வீடு + தோட்டம் - வீட்டு + தோட்டம் - வீட்டுத்தோட்டம் காடு + மரம் - காட்டு மரம் முரடு + காளை - முரட்டு + காளை - முரட்டுக்காளை பகடு + வாழ்க்கை - பகட்டுவாழ்க்கை ச@ோறு + பானை - ச@ோற்று + பானை - ச@ோற்றுப்பானை ஆறு + நீர் - ஆற்றுநீர் வயிறு + பசி - வயிற்று + பசி - வயிற்றுப்பசி கயிறு + வண்டி - கயிற்றுவண்டி இ) முற்றியலுகரப் புணர்ச்சி நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.
பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதலெ ழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும். வரவறிந்தான் - வரவு + அறிந்தான் வரவு (வ் +உ) + அறிந்தான் - ‘முற்றும் அற்று ஒரKோவழி’ என்னும் விதிப்படி ‘உ’ மறைந்தது. வரவ் + அறிந்தான் - ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே‘ என்னும் விதிப்படி ‘வரவறிந்தான்’ எனப் புணர்ந்தது. ஈ) இயல்பீறு, விதியீறு - புணர்ச்சி இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன், க ச த ப என்னும் வல்லின மெய்களை முதலில்கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே வல்ல ற்று மிகுந்து புணரும்.
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டறஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே. (நன்னூல்- ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் ( நன்னூல்- ) முற்றும் அற்று ஒரோவழி (நன்னூல்- ) இயல்பீறு என்பது இயல்பாக நிற்கும் ச@ொல்லின் வடிவம் பள்ளி + தோழன் - பள்ளித்தோழன் விதியீறு என்பது புணர்ந்தபின் நிற்கும் ச@ொல்லின் வடிவம் நிலம்+ தலை வர் - நில + தலை வர் ( விதியீறு ) - நிலத்தலைவர் XI Std Tamil திரைப்படம் - திரை + படம் திரை + ப் + படம் - ‘ இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் ’என்னும் விதிப்படி‘ திரைப்படம்’ எனப் புணர்ந்தது. மரக்கலம் - மரம் + கல ம் - மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் என்னும் விதியின்படி மர + கல ம் - ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்’ என்னும் விதிப்படி ‘மரக்கலம்’ எனப் புணர்ந்தது. உ) பூப்பெயர்ப் புணர்ச்சி பூ என்னும் ச@ொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு.
எனினும், மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது. பூ + கொடி - பூக்கொடி, பூங்கொடி பூ + ச@ோலை - பூச்சோலை, பூஞ்சோலை பூ + தொட்டி - பூத்தொட்டி, பூந்தொட்டி பூ + பந்து - பூப்பந்து, பூம்பந்து ஊ) மெய்யீற்றுப் புணர்ச்சி நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து, மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர். வாயொலி - வாய் + ஒலி - ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ’ என்னும் விதிப்படி ‘வாயொலி’ எனப் புணர்ந்தது. மண் + மகள் - மண்மகள் என்பதில் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலும் மெய்யெழுத்தாக நிற்க இயல்பாகப் புணர்ந்தது.
எ) தனிக்குறில்முன் ஒற்று – புணர்ச்சி நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும். கல் + அதர் - கல்லதர் - தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் கல்ல் + அதர் - உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி கல்லதர் எனப் புணர்ந்தது. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (நன்னூல் - ) பூப்பெயர் முன் இனமென மையுந் தோன்றும் (நன்னூல்- ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்; விதவாதன மன்னே . ( நன்னூல்- ) தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் (நன்னூல் – ) XI Std Tamil ஏ) மகர ஈற்றுப் புணர்ச்சி நிலைமொழிச் ச@ொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.