இயல்பே - புவியாட்சி கற்பவை கற்றபின்... வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் காவியத்தைத் தழுவி, தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது புரட்சிக்கவி. பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாகக் கனக சுப்புரத்தினம் என்னும் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர். ‘குயில்’ என்னும் இலக்கிய இதழ நடத்தியுள்ளார். இவருடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது. நூல்வெளி . மக்களாட்சியின் சிறப்பைப் பற்றிக் கட்டுரை எழுதுக.
. பாரதிதாசனாரின் ’புரட்சிக் கவி’ குறுங்காவியத்தை முழுமையாகப் படித்துச் சுவைத்து உங்கள் கருத்தைப் பதிவு செய்க. தெரிந்து தெளிவோம் ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு. தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொள்ளலாம்.
பிற மொழியிலிருந்து தமிழுக்கு “அந்நியன்” - ஆல்பர் காம்யு, “உருமாற்றம்”- காப்கா - ஜெர்மனியிலிருந்து ‘சொற்கள்’- ழாக் பிரெவர், “குட்டி இளவரசன்”- எக்சுபெரி - பிரெஞ்சிலிருந்து “உலகக் கவிதைகள்”- தொகுப்பு: பிரம்மராஜன் தமிழிலிருந்து பிற மொழிக்கு சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு ஏ.கே.ராமானுஜம் - Love Poems from a Classical Tamil Anthology ம.லெ. தங்கப்பா - Hues And Harmonies From An Ancient Land XI Std Tamil பாடல் பின்னணி உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவன் வடக்கே இமயமலைவரை படையெ டுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன். தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.
கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன். சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குமட்டூர்க் கண்ணனார் புகழ்வதாகப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் உள்ள இப்பாடல் அமைந்துள்ளது. நாட்டில் வாழும் உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும். அவ்வாழ்வு சிறக்க நாட்டின் அரசன் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.
வள்ளுவர், “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்று குறிப்பிடுகிறார். பசியும் நFோயும் பகையும் இல்லாதிருப்பதே சிறந்த நாடு என்று அறிவுறுத்துகிறார். நிரைய வெள்ளம் பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின் நீபுறம் தருதலின் நோய்இகந்து ஒரீஇய யாணர்நன் னாடும் கண்டுமதி மருண்டனென் மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின் புரைவயின் புரைவயின் பெரிய நல்கி ஏமம் ஆகிய சீர்கெழு விழவின் நெடியோன் அன்ன நல்லிசை ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே. ( : - ) - குமட்டூர்க் கண்ணனார்.