கற்பவை கற்றபின்... ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்‘ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி‘ என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் திருப்பி அளித்தார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டால் அவருடைய ஆளுமையின் பேருருவை அறிய முடியும். குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
‘குருதேவ்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தாகூரின் ‘ஜனகணமன’ என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாகவும் ‘அமர் சோனார் பங்களா’ என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப் பண்ணாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன. சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசுவாமி . அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்.
வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது. நூல்வெளி . நேரு, இந்திராவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வகுப்பறையில் படித்து அது குறித்துக் கலந்துரையாடுக. .
உங்களது சுவையான பயண அனுபவம் ஒன்றைக் கடிதமாக எழுதுக. தாகூரின் கையொப்பம் XI Std Tamil ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவை களோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்னும் மகாகவி கூற்றின் நீட்சியே, ‘கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்’ என்னும் இன்குலாபின் குரலாகவும் ஒலிக்கிறது. தம் எழுத்துகள் எளிய மக்களுக்கானவை என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் என்ற மூவகையிலும் நின்று வாழ்ந்தவர்.
அவர் பெயர் சொல்லி அழைக்க ஆசைப்பட்ட ஒவ்வொரு புல்லும் இந்த உண்மையை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். பHோதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பHொங்கும் சமத்துவப்புனலில் கரையும்! எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும். கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு!
சமயம் கடந்து மானுடம் கூடும் சுவர் இல்லாத சமவெளி தோறும். குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன் மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்! - இன்குலாப் கற்பவை கற்றபின்... சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர்.
அவருடைய கவிதைகள், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர்