📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 26question

தமிழரின் உலகப் பரவல் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். அக்கா, மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றார்.

வம்சவிருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர். வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார். நூல்வெளி . அயல்நாட்டில் வசிக்கும் நீங்கள், உங்கள் மண்ணின் நினைவுகளை நண்பருடன் பகிர்வதுபோலொரு கற்பனைக்கடிதம் எழுதுக.

. நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பாக்குக. கற்பவை கற்றபின்... கனடா வில் முதல்முறையாக ஒரு புதிய சால ஒன்றுக்கு ‘ வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. வன்னி வீதி, தமிழர்களுக்குச் சொந்தமான வீதி. இந்த வீதியை ஒன்றும் இலகுவாகச் சிதைக்க முடியாது. நூலகத்தை எரித்ததுபோல இதை அழிக்க முடியாது.

என்றென்றைக்குமாகக் கனடா வில் ஈழத்தமிழரின் புலம்பெயர் வரலாற்றை நினைவுபடுத்தியபடியே இந்த வீதி நிற்கும். பனியும் பனி சார்ந்த நிலமும் சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை யில் ஒன்று ஐங்குறுநூறு . ஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலா க ஐந்து நூறு பாட ல்கள் கொண டது. அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாட ல்கள் இல்லை.

புலம்பெயர்ந்த பத்து லட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதேசங்களுக்குத் தான். என்னுடைய கிராமம் கொக்குவில் . அங்கே காகம் இருந்தது. ஆறுமணிக்குருவியும் இருந்தது.

சரியாக கால ஆறு மணிக்கு இந்தக் குருவி ‘கீஈஈஈய்க்’ ‘கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்குப் பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோ ய் மீண்டும் திரும்பும்.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவிபோல . அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும் . ஆம், ஆறாம் திணை.

XI Std Tamil சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை . அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகள் காரண மாக அமைகின்றன. சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுத்தும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன.

அவ்வாறு சந்திக்கும் இடத்தில் வரும் எழுத்துகள் எவையெவையென அறிந்துகொள்ள வேண்டும். காவிரி, டமாரம், றெக்கை, பாவை , ராக்கி, கோதை, டப்பா போன்ற சொற்களில் தமிழ்ச்சொற்கள் எவை என்பதை அறிய முடிகிறதா? இவற்றுள் காவிரி, பாவை , கோதை ஆகியவை தமிழ்மொழிச் சொற்களாக உள்ளன. டமாரம், றெக்கை, ராக்கி, டப்பா ஆகியவை பிறமொழிச்சொற்களாக உள்ளன.

எனவே , சொற்களில் தமிழ்மொழிக்கு உரியவை, பிறமொழிக்கு உரியவை எவையெவை என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்குச் சொற்களில் எழுத்துகளின் வருகை குறித்து அறிந்துகொள்ள வேண்டும். மIொழி முதல் எழுத்துகள் - .  உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

. மெய்யெழுத்துகள் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன. .

மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →