( ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே ங வரும்), . ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை. . ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
குறள் என்ற சொல்லை க் + உ + ற் + அ + ள் எனப் பிரிக்கலாம். சொல்லின் முதலில் உள்ள ‘கு’ என்னும் உயிர்மெய் எழுத்தை, க் + உ எனப் பிரிக்கும்பொழுது க் என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம். ‘ங்’ என்னும் மெல்லின மெய் ‘விதம்’ எனப் பொருள் தரும் ‘ஙனம்’ என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது.
அ, இ, உ என்ற சுட்டெழுத்துகளுடனும் எ, யா என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙன ம், எங்ஙனம் என்று வரும். தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது. உங்ஙனம் என்பது தற்பொழுது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால், தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்றும் இலங்கைத் தமிழர் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.