📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 29question

மIொழி முதல், இறுதி எழுத்துகள்

Chapter 2: Front Matter · Tamil

மIொழி முதல், இறுதி எழுத்துகள் XI Std Tamil இவ்விலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்து மொழிக்கானவையே அன்றி, பேச்சு மொழிக்கானவை அல்ல. மேற்காட்டிய எழுத்துகள் நீங்கலாக உள்ள பிற எழுத்துகள், சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச் சொற்களாக இருக்கமாட்டா; பிறமொழிச் சொற்களாகவோ, ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கின்றன. மIொழிமுதல் எழுத்துகள் உயிரெழுத்துகள் மெய்யெழுத்துகள் மIொத்தம் மIொழி இறுதி எழுத்துகள் - . உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

. மெய்களில் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் என்னும் பதினோரெ ழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும். .  க் ச் ட் த் ப் ற் என்ற வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

. பழை ய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக்கொள்வ ர். ஞ் ந் வ் மூன்றும் பழை ய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.

மIொழி இறுதி எழுத்துகள் உயிரெழுத்து மெய்யெழுத்து குற்றியலுகரம் மIொத்தம் புணர்ச்சி நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒருசொல் போலவே பேசுகிறோம். எழுதும்போதும் அவ்வாறே எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒருசொல் வடிவம் உடையன. ஆயினும், இவை இரண்டு சொற்களின் சேர்க்கையாக உள்ளன.

தமிழ் + அரசி - தமிழரசி நாடு + பண் - நாட்டுப்பண் இவற்றில் முதலில் நிற்கும் சொல்லை ’நிலைமொழி’ என்றும் அதனோடு வந்து சேரும் சொல்லை ‘வருமொழி’ என்றும் அழைப்பர். இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் புணர்ச்சி என்பர். நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும். உயிரீறு, மெய்யீறு நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது ‘ உயிரீறு ’ எனப்படும்.

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது ‘ மெய்யீறு ’ எனப்படும். மணி (ண் + இ) + மாலை = மணிமாலை - உயிரீறு; பொன் + வண்டு = பொன்வண்டு - மெய்யீறு உயிர்முதல், மெய்ம்முதல் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது ‘ உயிர்முதல் ’ எனப்படும். வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது ‘ மெய்ம்முதல் ’ எனப்படும். வாழை+இலை = வாழையிலை- உயிர்முதல்; தமிழ் + நிலம்(ந்+இ) = தமிழ்நிலம் - மெய்ம்முதல் XI Std Tamil எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

ச@ொற்களின் அடிப்படையில் புணர்ச்சி இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல் லும் உரிச்சொல் லும் பெயரையும் வினையை யும் சார்ந்தே வருகின்றன. இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துகளின் புணர்ச்சியே ஆகும். வ.

எண் நிலைமIொழி வருமIொழி எ.கா. பெயர் + பெயர் கனி + சாறு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →