📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 41question

தெரியுமா?

Chapter 2: Front Matter · Tamil

தெரியுமா? பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரித்து விற்பதன்மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர். “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய்.

அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென மையானதும்கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்” - மசானபு ஃபுகோகா XI Std Tamil என்னும் நூலை எழுதியவர். உழப்படாத நிலம், வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல் ஆகிய ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் ச@ொன்னவர்.

வைக்கோலை மடக்கி உழுவதோ டு மட்டுமல்லாமல் பருவம் வந்தவுடன் நீரைத் தேக்கி உழுதல் வேண்டும். உழும் போது தொழு உரம் இட வேண்டும். ஆனா, ஒரே ஆண்டில் நிலத்தின் நஞ்சு நீங்காது, ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். மங்கை : சித்தப்பா, தொழு உரம் என்றால்?

ச@ொக்கலிங்கம்: தொழு உரம்னா , வேற ஒன்றுமில்லை, மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றைக் கல ந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்க வேண்டும். இது நஞ்சை நிலத்துக்கு! புஞ்சைன்னா, காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கல ந்து போட்டால் போதும். சாம்பல்னா எங்காவது போய், தொழிற்சாலைக் கழிவை எடுத்துவந்து போடக் கூடாது!

ஆடு, மாடு முதலிய கால்நடைக ளின் சாணத்தை எரிப்பதனால் கிடைக்கும் சாம்பல் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். (இருவரும் பேசியபடி சரிவான பகுதிக்கு வருகிறார்கள்) மங்கை : என்ன இது? முன்பு உங்கள் நிலத்தில் இப்படி ஒரு குளம் இல்லையே! ச@ொக்கலிங்கம்: ஆமாம் மங்கை, இந்த மருதம் பண்ணைக்கு வளமே, இந்தக் குளம்தான்.

பழைய கிணத்துல தண்ணீர் அதிகம் இறங்கிருச்சும்மா! நான் இங்கு வந்து இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் என்று நினைத தபோது, முதல்வேலை நிலத்தில் இருக்குற நச்சுத்தன்மையை நீக்கியது. அடுத்த வேலை, நீர்வளத்தை அதிகப்படுத்தியது. மங்கை : அப்படின்னா, எத்தனை அடி ஆழத்தில் தண்ணீர் வந்தது!

பழைய குளத்தையே, ஆழமாக்கினீங்களா? புதுசா வெட்டினீங்களா? ச@ க்கலிங்கம்: அந்தத் தப்பை நான் செய்யவில்லை! சின்னச்சின்னதா வாய்க்கால் வெட்டினேன்.

பழைய கிணத்தைச் சுற்றிச் சின்னச்சின்ன மரக்கன்றுகளை நட்டேன். என் நல்ல நேரம், நல்ல மழை பெய்தது. வாய்க்கால் மூலமா வந்த தண்ணீர் இந்தக் குளத்துல தேங்குச்சு! தண்ணீரே இல்லாத பழைய கிணத்திலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது!

மங்கை : இந்த இடத்துல சில்லுன்னு நல்லாக் காற்று வருது. இது மரத்துல மோதி வருகிற காற்றா? நீரில் மோதி வருகிற காற்றா? என்ன சிலிர்ப்பு!

வெயிலே தெரியவில்லை! மல்லிகா : மங்கை, பண்ணையத்துக்கு வெயிலும் ரKொம்ப முக்கியம்மா! மழைநீர்ச் சேகரிப்பால நமக்குக் கிணத்துத் தண்ணீர் மட்டம் உயர்ந்திருச்சு! மங்கை: சித்தப்பா, நம்ம பண்ணையில் என்னவெல்லாம் விளைகின்றன?

நிறைய மரங்கள் இருக்கின்றன. இதென்ன, இந்தப் பயிர் புதுசா இருக்கு? ச@ொக்கலிங்கம்: மங்கை, இது உளுந்து. நெல்லுக்கு ஊடுபயிராகப் போடுவது!

இதை அறுவடை செய்தபின், அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் நைட்ரஜன், நிலத்தின் வளத்தைப் பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும். மங்கை: சரி! ஆனால்? பூச்சி விழுந்தா

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →