📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 157question

திருக்குறள்

Chapter 2: Front Matter · Tamil

திருக்குறள் XI Std Tamil ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. * வில் வீரரின் பகையை ப் பெற றாலும், சொல்வன்மை உடைய அறிஞரின் பகையை ப் பெறக்கூடாது! ) இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. * சிறியதாக இருக்கையிலேயே முள்மரத்தைக் களைந்து விடுக!

முதிர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கையையே காயப்படுத்தும். அணி : பிறிதுமIொழிதல் அணி மருந்து ) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது பHோற்றி உணின். * உண்டதும், செரித்ததும் அறிந்து உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை. ) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

* நோயையும் அதன் காரணத்தையும் அதை நீக்கும் வழியையும் ஆராய்ந்து மருத்துவர் செயல்பட வேண்டும். அணி : சொற்பொருள் பின்வரும் நிலையணி ) உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். நோயாளியின் வயதையும் நோயின் அளவையும் குளிர்காலம், வேனிற்காலம் முதலிய பருவங்களையும் அறிந்து மருத்துவர் செயல்படவேண்டும் ) உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. நோயாளி, மருத்துவர், மருந்து, மருத்துவ உதவியாளர் – என்று மருத்துவம் நான்குவகையில் அடங்கும்.

இரவச்சம் ) இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். * பிறரிடம் கையேந்தி உயிர்வாழும் நிலை இருக்கும் எனில், அப்படி அந்நிலையை உருவாக்கியவன் அலைந்து கெடட்டும். ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்னும் பாதுகாப்பற்ற படகு, கொடாமை என்னும் பாறை மோதினால் உடைந்துவிடும்.

அணி : உருவக அணி XI Std Tamil கற்பவை கற்றபின்... . படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க. அ) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை ஆ) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்.

இ) உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். . கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. கொடி தவித்ததைப் பாரி அறிந்துகொண்டான் மயில் தவித்ததைப் பேகன் உணர்ந்துகொண்டான் பிள்ளையின் பரிதவிப்பைத் தாய் அறிவாள் பளிங்கு முகத்தைப் படித்துக்கொள் அப்படிப் படித்தவர்களைப் பிடித்துக்கொள்.

அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் இ) இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து XI Std Tamil . மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து -------- நினை. அ) முகக்குறிப்பை அறிந்தவரை ஆ) எண்ணியதை எண்ணியவரை இ) மறதியால் கெட்டவர்களை ஈ) சொல்லேர் உழவரை . பொருள் கூறுக.

அ) ஏமம் ஆ) மருந்துழைச் செல்வான் . இலக்கணக்குறிப்புத் தருக. அ) கெடுக ஆ) குறிப்புணர்வார் குறுவினா . மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?

. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை? . பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.

. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்? சிறுவினா . உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.

. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக. . மருந்து, மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?

நெடுவினா வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக. XI Std Tamil பாடப் பகுதி  Ø தமிழர் கலைகளை அவை படைக்கப்பட்ட காலப்பின்னணி, அறிவியல் நுட்பங்களுடன் இணைத்துப் போற்றுதல்  Ø இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உரையாடல் வடிவங்களைச் சுவைத்துப் பின்பற்றுதல்  Ø வாழும் காலத்து ஆளுமைகளின் திறமைகளை உணர்ந்து முன்னோடியாகக் கொள்ளுதல்  Ø கலைச்சொல்லாக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்து புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல் கற்றல் நFோக்கங்கள் காலத்தை வென்ற கலை கேள்வி, ஒரு புளியமரம் - ஆத்மாநாம் குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர் திருச்சாழல் - மாணிக்கவாசகர் இசைத்தமிழர் இருவர் கலைச்சொல்லாக்கம்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →