திருச்சாழல் XI Std Tamil தெரியுமா? பெண் : தான் முடிவு இல்லாதவனாக இருந்தும் அவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தானே, இது என்ன புதுமை? பெண் : உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருளாகும். இலக்கணக்குறிப்பு சுடுகாடு, கொல்புலி, குரைகடல் - வினைத்தொகைகள்; நல்லாடை – பண்புத்தொகை.
உறுப்பிலக்கணம் உண்டான் - உண் + ட் + ஆன் உண் - பகுதி, ட் - இறந்தகால இடைநிலை ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி. புணர்ச்சி விதி கற்பொடி - கல் + பொடி லள வேற்றுமையில் வலி வரின் றடவும் - கற்பொடி. உலகன த்தும் - உலகு + அனைத்தும் உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும், உலக் + அனைத்தும் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே உலகனைத்தும் திருவடி - திரு + அடி ஏனை உயிர்வழி வவ்வும், திரு + வ் + அடி உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே திருவடி. கற்பவை கற்றபின்...
திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர் . இது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் திருப்பதிகங்கள் உள்ளன.
இவற்றுள் மொத்தம் பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டவை திருவாசகப் பாடல்கள். ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது முதுமொழி.
திருச்சாழல் தில்லைக் கோவிலில் பாடப்பெற்றது. ஜி.யு. போப் திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
திருவாதவூரைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகியனவ கும். நூல்வெளி சாழல் என்பது பெண்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
ஒரு பெண் வினா கேட்க, மற் றொரு பெண் விடை கூறுவதாக அமைந்திருக்கும். இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும். திருமங்கையாழ்வாரும் தமது பெரிய திருமொழியில் இதே வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார். மக்கள் வழக்கில் ஒருவர் விடுகதை சொல்லியும் அதற்கு மற் றொருவர் விடை கூறியும் விளையாடுவது இன்றைக்கும் வழக்கில் உள்ளது.
இரண்டு அடி வாங்கினால்தான் திருந்துவாய் என்றால் வள்ளுவரிடம் வாங்கு. ஏய்! யாரங்கே ஆற்றில் பாலைக் கொட்டிவிட்டு ஓலமிடுவது? அருவி.
பழிப்பது போலப் புகழும் மொழி நுட்பம் இக்கவிதைகளின் பொருளை மெருகேற்றுகிறதா? விவாதிக்க. XI Std Tamil இசை! கலைகளின் மகுடம்!
உணர்வுகளின் வினையூக்கி. இசை, குருதியைச் சூடேற்றும்; உயிரை உருக்கும்; ஆழ்கடல் அமைதியாய் மனத்தை உறங்க வைக்கும். இரசனையின் முகவரிக்கு இசைமொழியில் கடிதமெழுதும் காற்றின் கவிஞர்களே இசைக்கலைஞர்கள். தமிழகத்தின் காட்டிலும் மேட்டிலும் வயல் சேற்றிலும் தவழ்ந்த இசையைச் சீராட்டி, மெருகூட்டி உலகுக்குத் தந்து மகிழ்ந்தவர் இருவர்.
இவ்விருவரும் உலக இசைப்பேரேட்டின் தமிழகத்து முத்திரைகள்; அவர்கள், சிம்பொனித் தமிழர் இளையராஜா, ஆஸ்கர் தமிழர் ஏ.ஆர். இரகுமான் ஆகியோர் ஆவர்.