ஞ்சி XI Std Tamil சிங்கன் : நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல நெளிந்த நெளிவு என்னடி சிங்கி? (நெளிந்த) சிங்கி : பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப் பாடகம் இட்டதடா சிங்கா! (பாடகம்) சிங்கன் : மாண்ட தவளை உன் காலிலே கட்டிய மார்க்கம் அது ஏது பெண்ணே சிங்கி? (மார்க்கம்) சிங்கி : ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப் பெண்கள் அணிமணிக் கெச்சம் அடா சிங்கா!
(அணிமணி) சிங்கன் : சுண்டு விரலிலே குண்டலப் பூச்சி சுருண்டு கிடப்பானேன் சிங்கி? (சுருண்டு) சிங்கி : கண்டிய தேசத்தில் பண்டுநான் பெற்ற காலாழி பீலியடா சிங்கா! (காலாழி) ச@ொல்லும் பொருளும் கொத்து - பூமாலை; குழல் - கூந்தல்; கோலத்து நாட்டார் - கலிங்க நாட்டார்; வரிசை - சன்மானம்; நாங்கூழ் - மண்புழு. இலக்கணக்குறிப்பு மாண்ட தவளை - பெயரெச்சம்.
பகுபத உறுப்பிலக்கணம் பெற்ற - பெறு (பெற்று) + அ பெறு - பகுதி பெற்று - ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது அ - பெயரெச்ச விகுதி. புணர்ச்சி விதி பயமில்லை - பயம் + இல்லை உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - பயமில்லை. தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் என்னும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து, அங்குள்ள குற்றாலநாதரைப் போற்றிப் பாடப்பட்டது குற்றாலக் குறவஞ்சி . இந்நூல், திரிகூட ராசப்பக் கவிராயரின் ‘கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்டது.
மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார் விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது. திரிகூட ராசப்பக் கவிராயர் திருநெல்வேலியில் தோன்றியவர். குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். ’திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான்’ என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர்.
குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார். நூல்வெளி கற்பவை கற்றபின்... . குறவஞ்சியில் கூறப்பட்டுள்ள அணிகலன்களின் பெயர்களைப் படங்களுடன் திரட்டி அணிகலன்கள் அணியப்படுவதற்கான அறிவியல் காரணங்களையும் இணைத்து, படத்தொகுப்பேடு உருவாக்குக.
. குறவஞ்சியில் இடம்பெறும் உரையாடல் நயத்தைப் புலப்படுத்துக. XI Std Tamil கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லா ம் வீடுவர்காண் சாழலோ.
தானந்தம் இல்லான் தனை யடைந்த நாயேனை ஆனந்த வெள்ள த் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ள த் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. - மாணிக்கவாசகர் மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை திருச்சாழல் ஆகும். ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது இது. இவ்வகையில் மாணிக்கவாசகர் இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.
ச@ொல்லும் பொருளும் காயில் - வெகுண்டால்; அயன் - பிரமன்; மால் - விஷ்ணு; ஆலாலம் – நஞ்சு; அந்தம் - முடிவு. பாடலின் பொருள் பெண் : சுடுகாட்டைக் கோயிலாகவும் புலித்தோ லை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாயும் தந்தையும் இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்? பெண் : எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும் அவன் சினந்தால் உலகம் அனைத்தும் கற்பொடியாகிவிடும்.
பெண் : அக்காலத்தில் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய நஞ்சை, சிவன் உண்டான். அதற்குக் காரணம் யாதEோ? பெண் : அந்த நஞ்சை இறைவன் உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அன்றே அழிந்து ஒழிந்திருப்பார்கள்.