இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட அக் கோவிலே இராசராசனுக்கு, அதுபோன்றதE ரு பெரிய கோவிலைக் கட்ட வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியது அல்லவா? பெரியவர்: பரவாயில்லையே, நிறையத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால், தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என்பதற்குச் சான்று எங்கே உள்ளது? இக் கோவில் எந்தக் கலைப் பாணியைச் சேர்ந்தது?
சொல்லுங்கள் பார்ப்போம். கதிர்: இந்தியக் கட்டடக் கலைப்பாணியை நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்றாகக் கூறுவர். அதில் தஞ்சைக் கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும். பெரியவர்: முதல் கேள்விக்குப் பதில் சொல்லலையே தம்பி?
நிலா: நான் சொல்கிறேன் ஐயா. 1886ஆம் ஆண்டு ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ் ஆறு ஆண்டுகள் தீவிரமாகக் கல்வெட்டுகளைப் படியெடுத்து வாசித்து இக் கோவிலை இராசராச சோழன்தான் கட்டினான் என்று உறுதி செய்தார். பெரியவர்: சரியாகச் சொன்னாய் அம்மா. இக் கோவிலில் அரிய ஓவியங்களும் இருக்கின்றன தெரியுமா?
கதிர்: செய்தித்தாள்களில் படித்த நினைவு இருக்கிறது. ஆனால், சரியாகத் தெரியவில்லை. கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை - பிரடிரிகா வொன்ஸ்லீவிங் XI Std Tamil பெரியவர் : 1930ஆம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த எஸ். கே.
கோவிந்தசாமி தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச்சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தார். அதில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியன சுவர் முழுவதுமாகப் பெரிய அளவில் வரையப்பட்டுள்ளன. நிலா: ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களைத்தானே சொல்கிறீர்கள்? சோழர் கால ஓவியங்கள் மீதே நாயக்கர் ஆட்சியில் ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிந்து அதனை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தியவரும் அவர்தானே ஐயா!
கதிர்: அந்த ஓவியங்களை நாங்கள் பார்த்துப் படமெ டுக்க இயலுமா? பெரியவர்: பொது மக்களுக்கு அனுமதியில்லையப்பா. சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார்க்க முடியும். கோவில்களுக் கோ, தE ல்லியல் கண்டுபிடிப்புகள் உள்ள இடங்களுக் கோ செல்பவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணராமல் சிலைகளைச் சேதப்படுத்துதல், சுவர்களில் கிறுக்குதல், தEொல்லிடங்களில் குப்பை போடுதல் போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
நம்முடைய தE ன்மையையும் பாரம்பரியத்தையும் பேசும் அந்த இடங்களை நாம் பாதுகாக்க வேண்டாமா? ஏற்கெனவே நாம் பல இடங்களை, அதன் முக்கியத்துவம் உணராமல் கற்களைப் பெயர்த்தும் கோபுரங்களைச் சிதைத்தும் சிலைகளை உடைத்தும் அழித்துவிட்டோமே தம்பி. கதிர்: ஆமாம் ஐயா. நீங்கள் சொல்வது சரியே.
வரலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை. தஞ்சைக் கோவிலில் நந்தியும் சிகரமும் ஒற்றைக்கல்லால் ஆனதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஐயா. பெரியவர் : இங்குள்ள நந்தி, சோழர் காலத்தைச் சார்ந்தது அன்று. நாம் பார்க்கும் இந்தப் பெரிய நந்தியும் மண்டபமும் நாயக்கர் காலத்தது தம்பி.
சோழர் காலத்து நந்தி தற்போது தென்புறத் திருச்சுற்றில் உள்ளது. இன்னொரு செய்தி சொல்கிறேன் கேளுங்கள், அந்தச் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக்கல் அன்று. பதின்மூன்று தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப்பழச்சுளை போன்று எட்டுக் கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டன. நிலா : புதிய செய்தி ஐயா.
கோபுரங்களை உயரமாகக் கட்டுவது என்பது பின்னால் வந்த பழக்கமில்லையா கதிர்? பழைய கோவில்களில் கோபுரங்கள் சிறியதாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நம்முடைய தமிழக அரசின் சின்னமே கோவில் கோபுரம்தானே! ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் ஃப்ரெஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது அதன்