📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 162question

காலத்தை வென்ற கலை · Part 3

Chapter 2: Front Matter · Tamil

ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம் இது. இவ்வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலும் காணலாம். திட்பமும் நுட்பமும் XI Std Tamil கதிர்: ஆம் நூற்றாண்டிலிருந்து கோபுரங்கள் தனிச்சிறப்புப் பெற்றன என்று சொல்லலாம். வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு வகைக் கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தEோற்றுவித்தவன் இராசராசன்.

அதனைத் திருவாயில் என்று சொல்வார்கள். கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்தானே நிலா! பெரியவர்: நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்திலிருந்து தE டங்கியது. கீழ்ப்பகுதியைக் கல்லாலும் மேற்பகுதியைச் செங்கற்களாலும் கட்டியிருப்பர்.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது விஜயநகர அரசு. காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் உள்ள கோபுரங்கள் எல்லாமே அடிக்கு மேல் உயரம் உள்ளவை. நிலா: இராசராசன் காலத்தில் பெண் அதிகாரிகள் அரசுப்பணிகளில் இருந்திருக்கிறார்கள் தெரியுமா! இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி திருவையாற்றில் கட்டிய கோவில் ஒலோகமாதேவீச்சுரம் என்று வழங்கப்படும்.

அந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில், “உடன் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற கோவலூரு டையான் காடந் னூற்றெண்மநையும் அதிகாரிச்சி எருதந் குஞ்சிர மல்லியையும்” என்ற வரிகளில் ‘எருதந் குஞ்சிர மல்லி’ என்ற பெண் அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியவர் : அதே கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்திலும் ஓர் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு இருக்கிறது. அவர் பெயர், அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி. மகிழ்ச்சிதானே!

கதிர்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கே! நிலா, இந்தச் செய்திகளைப் பற்றி எனக்குச் சொல்லவேயில்லையே! நிலா: அது இருக்கட்டும். ஐயா, நாங்கள் இருவரும் தEொடர்ச்சியாக, கட்டடக்க லை பற்றி ஆய்வு செய்து வருவதால் ஓரளவு இந்தச் செய்திகள் தெரியும்.

உங்களைப் பார்த்தால் சாமியாரைப் போல் இருக்கிறீர்கள். ஆனால், எங்களுக்குத் தெரியாத தகவல்களையும் சொல்கிறீர்களே….. பெரியவர்: இதே ஊரில் வசிக்கும் கல்தச்சன் நான். என் முன் னோர்கள் அல்லவா இப்படிப்பட்ட பெருங்கோவில்களை எழுப்பியிருக்கிறார்கள்.

கற்களே கிடைக்காத காவிரிச் சமவெளிப் பகுதியில் இவ்வளவு உயரத்தில் ஒரு கற் கோவில். தஞ்சையின் பெருமை இந்தக் கோவில். அடட ! இரண்டு, மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில் கட்டிவந்த காலத்தில் புதிய மரபு படைத்த வன் இராசராசன்.

என் தந்தை காலத்தில்கூட, கற்சிற்பங்கள் செய்திருக்கிறோம். அவ்வப்போது இந்தக் கோவிலுக்கு வருவேன். இங்கு வந்துவிட்டால் என் காதில் கற்களைச் செதுக்கும் உளியின் ஓசையும் பெருந்தச்சனின் ஆணைகளும் ஒலிக்கத் தEொடங்கிவிடும். அதன் கண்ணியைப் பிடித்துக்கொண்டு அந்த நூற்றாண்டின் பெருந்தச்சர்களான என் முன் னோர்களை வியந்தபடி இங்கே அமர்ந்திருப்பேன்.

( பேசியவாறே விடைபெ ற்றுச் செல்கிறார் பெரியவர்) XI Std Tamil கதிர் : தஞ்சைக் கோவிலை எந்த வகையிலும் மறக்க முடியாது. எத்தனை எத்தனை சிறப்புகள், அடட ! பெரியவர் சொன்ன புதிய தகவல்கள் ஆச்சரியம் இல்லையா நிலா. இப்போது, திரும்பவும் கோவிலைச் சுற்றிப் பார்க்கலாம்; படங்கள் எடுக்கணும்.

இவ்வளவு தகவல்கள் சொன்னவர் பெயரைக்கூட நாம் கேட்க மறந்து விட்டோமே ….. சரி, நாமும் கிளம்புவோம். (இருவரும் கோவிலை மீண்டும் சுற்றி வருகின்றனர்) நிலா: கதிர்,

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →