📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 178question

கலைச்சொல்லாக்கம் · Part 2

Chapter 2: Front Matter · Tamil

எவ்வகையான கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும் உடனுக்குடன் ஜப்பானியர்கள் தங்கள் மொழியில் புதிய சொல்லை உருவாக்கிவிடுவர். தாய்மொழி வழியில் ஜப்பானியர்கள் அறிவியல் தEொழில்நுட்பப் பாடங்களைக் கற்பதால் அங்கே நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. கலைச்சொல்லாக்கம் இல்லையென்றால் அவற்றை நாம் ஒலிபெயர்ப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, கலைச்சொற்களை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.

தமிழ்க்கனல்: நீங்கள் கூறிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கலைச்சொல் அகராதியை உருவாக்கும் பணியை பழந்தமிழிலக்கியச் சொல்லைப் பயன் படுத்துதல் வலவன் (PILOT) பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் அம்மை (MEASLES) பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல் தசம முறை (Decimal) புதுச்சொல் படைத்தல் மூலக்கூறு (Molecule) உலக வழக்கை ஏற்றுக் கொள்ளல் எக்ஸ் கதிர் (X-ray) பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல் ஒளிச்சேர்க்கை (Photosynthesis) ஒலிபெயர்த்துப் பயன்படுத்தும் சொற்கள் மீட்டர், ஓம் (Meter, Ohm) உலக அளவிலான குறியீடுகள், சூத்திரங்கள் Σ √ A = π r H O, Ca இன்றிலிருந்தே தEொடங்குகிறோம். நன்றி ஐயா. முத்து: கலைச்சொற்கள் தE டர்பான பல பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.. அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் உள்ள முறைகள் குறித்து அறிவியல் அறிஞர் வா.செ.

குழந்தைசாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழில் கலைச்சொற்களை உருவாக்கிடும் போது பழந்தமிழிலக்கியச் சொற்களையும் பேச்சுவழக்குச் சொற்களையும் புதிய சொற்களையும் இயன்றவரை பயன்படுத்தல் வேண்டும். அன்றாட உரையாடலில் நாம் தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடுவோர், பிறமொழிச்சொற்களை அப்படியே கையாள்வதையோ ஒலிபெயர்ப்புச் சொற்களாக மாற்றுவதையோ கடன்வாங்குவதையோ தவிர்த்தல் வேண்டும்.

நாம் கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடும் போது தமிழில் எண்ணற்ற புதிய சொற்களை உருவாக்குவதEோடு படைப்புகள் சார்ந்த அறிவையும் பெறலாம். SubJunior மிக இளையோர் Super Senior மீமூத்தோர் Carrom நாலாங்குழி ஆட்டம் Sales Tax விற்பனைவ ரி Customer வாடிக்கையாளர் Consumer நுகர்வோர் Account பற்று வரவுக் கணக்கு Referee நடுவர் XI Std Tamil இலக்கணத் தேர்ச்சி கொள் . கலைச்சொல்லாக்கம் - பொருள் தருக. .

கலைச்சொல்லாக்கப் பணிகள் தEொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை ? . பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக. Personality, Emotion, Plastic, Escalator, Apartment, Straw, Mass Drill, Horticulture, Average .

SHIP என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக. .  உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வா.செ. குழந்தைசாமி கூறுகிறார்?

இன்றைய நிலையில் பலரும் கலைச்சொற்களை உருவாக்கிய வண்ணம் உள்ளனர். கற்றறிந்தோர், கற்றறியாதோர், கைவினைஞர்கள், பயிற்றுநர், மாணவர்கள், மகளிர், குழந்தைகள் எனப் பலரும் கலைச்சொற்களைத் தாமாகவே உருவாக்குகின்றனர். அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும்போது பல்வேறு சொற்களை ஆள்கின்றனர். எடுத்துக்காட்டாக, Antibiotics - எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லிகள், உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நச்சுயிர்க் கொல்லிகள் எனப் பல்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கலைச்சொற்கள் தமிழில் சொல்லாக்க வளர்ச்சியினை வெளிப்படுத்துவனவ க உள்ளன. ஆனால், கலைச்சொற்களைக் கற்பதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் துறைசார்ந்த நிலையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க அச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். இதற்கென குழு ஒன்றை உருவாக்கலாம்.

தெரிந்து தெளிவோம் ஒரு சொல்லை மொழிபெயர்க்கும்போதோ அல்லது புதிய சொல்லை உருவாக்கும்போதோ அச்சொல் அதே போன்ற வேறு பல

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →